டீக்கடை: விஜயகாந்த், வினுசக்ரவர்த்தி,வெண்ணிறாடைமூர்த்தி
(இடம்: டீக்கடை இம்சைகள்: வெண்ணிறாடை மூர்த்தி, வினுசக்ரவ்ர்த்தி, விஜயகாந்த்)
வெண்ணிறாடை மூர்த்தி: ப்ர்ர்ர்! குஜால இருந்த ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஐஸ் கோயில் பிரச்சனை. அதோட தீர்வுக்காக நம்ம கலைஞர் கபாலத்தில் இருந்து கலக்கலா ஒரு ஐடியாவ தட்டி விட்டாராமே?
வினுசக்ரவர்த்தி: என்னத்த எழவு சொல்லி இருப்பாரு! "சிவன் ஒரு கஞ்சாகுடி; ஆனால் அவர் எனக்கு எதிரியுமல்ல"னு சொல்லி மத்தவன் தலையையும் அவரோட தலை மாதிரி ஆக பிச்சிக்க வைப்பாரு!!
வெ.மூ: ஒலிம்பிக் போட்டியில அஞ்சு பாப்பா, அபாரமா ஆடும்னு பார்த்தா. இப்படி மண் தாண்டுரேனு தொபகட்டீர்னு உழுந்து மண்ணை கவ்விடுச்சே!
வி.ச: அடி செருப்பால! அது என்னய்யா அஞ்சு மேல மட்டும் அப்படி ஒரு அக்கரை. ஒருத்தனைத் தவிர போன இந்தியன் எல்லாரும்தான் மெடலும் வாங்கம கொடலு தள்ள வரப்போறானுவ!பிறகு என்னதுக்கு அந்த கருமம்!
வெ.மூ: சரி அது இருக்கட்டும்! உலகநாயகன் உருவாக்குர மர்மயோகி படத்தில நடிக்க நக்கல் நாயகன் சத்யராஜை கூப்பிட்டாங்களாமே! நெசமாவா?
வி.ச: என்னது உலகநாயகனா? அறுவாளை எடுத்தேன் கொலை விழுகும். முதல்ல தமிழ்நாட்டுக்கு படம் எடுக்கட்டும் அப்புறம் உலகம் அண்டம் பத்தி பேசலாம். வாழும்பெரியாரை கூப்பிட்டு நெப்போலியன் வந்தது போல இரண்டு சீன் நடிக்க சொன்னா எப்படி நடிப்பாரு!நமீதா கூட குத்தாட்டம் போடும்படி ஒரு சீன் வச்சா சரினு சொல்லுவாரு!!
உனக்கும் எதாவது தமிழ் வாத்தியாரு ரோல் இருக்கானு கேட்டியா? அப்படியே எனக்கும் 'எழவு' 'நாசமா போவ' அப்படினு சொல்லுற மாதிரி ஒரு ரோல் கிடைக்குமானு பாரு!
வெ.மூ: இப்படி குபீர்னு கோபம்பட்டா, கொடக்கு இருக்குற என்னோட வேட்டி லொடக்குனு கழண்டுக்கும். கத்தாதிங்க! அமைதியா அடுத்த சேதிய கேளுங்க!
வி.ச: யோவ்! சரிய்யா! அடுத்த எழவை படி!
வெ.மூ: தமிழ்மணத்தில் யாரைப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை தாருமாரா வையராங்களாமே?
வி.ச: பானையில தண்ணி வச்சி குடிக்க சொல்லு, வயித்தெரிச்சல் கொறயும்!
(விஜயகாந்த் டீக்கடைக்கு வேகமா வந்துட்டு இருக்கார்)
வெ.மூ: என்ன புரச்சி கலஞரே! டீசர்ட்டுல வரீங்க!
வி.கா: நான் வெள்ளையும்ஜொள்ளையுமா வந்தேனா... சட்டசபை போறேனு அர்த்தம். காக்கிசட்டையில வந்தேனா... படத்துல நடிக்க போறேனு அர்த்தம். டீசர்ட்டுல வந்தேனா... டீ சாப்பிட போறேனு அர்த்தம்.
வி.ச: என்ன எழவுயா இது! ஒரு கேள்வி கேட்டதுக்கு மூணு பதில் வருது! இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா?
வெ.மூ: படத்துல படப்படனு Dialogue பகிரங்கமா பப்பரபேனு பேசி இப்படி ஆகிட்டாரு! இவருக்கு Accroto Dialogomania-னு ஒரு வியாதி. அது இருந்தா இப்படித்தான். கண்டமேனிக்கு உளருவாங்க!
வி.கா: தமிழனுக்கு ஒரு டீ போடுப்பா! ஆங்ங்ங்!!
(வெ.மூ-வைப் பார்த்து) நியுஸ்பேப்பர்ல பாக்கிஸ்தான் திவிரவாதிகளைப் பத்தி எதாவது போட்டு இருக்கா?
வி.ச: என்னைய்யா? வந்ததும்வராதுமா தீவிரவாதிய பத்தி கேக்குராரு!
வெ.மூ: இவருக்கு இன்னோரு வியாதியும் இருக்கு! Terroristophilia-னு சொல்லுவாங்க!
வி.ச: அது சரி!
வெ.மூ: தீவிரவாதிகளைப் பத்தி திவ்யமா ஒன்னும் இல்லையே!
வி.கா: என்னது ஒன்னும் இல்லையா? இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.
இப்படித்தான் 1942-ல காமராஜர் கால்ல முள்ளு குத்தினது. அதுக்கு காரணம் இந்தக் கருணாநிதி. 1980-ல் மவுண்ட் ரோட்டில் ஒரு நாய் கொலைச்சது. அதுக்கு காரணம், ஜெயலலிதா. ஆனா நான் ஆச்சிக்கு வந்தேனா எம்ஜிஆர் ஆச்சிய கொடுப்பேன்.
வெ.மூ: (வினுசக்ரவர்த்தியைப் பார்த்து) இதுக்குமேல இங்க நாம இருந்த கபாலம் வெடிச்சி கட்டெரும்பு வெளியவந்துடும். வா! கபால்னு கழண்டுக்குவோம்.
(இரண்டு பேரும் துண்டைக்காணோம், துணியைகாணோம்னு எஸ்கேப்ப்ப்ப்ப்...!! ஆனா இன்னும் நம்ம கேப்டன் நிறுத்தினபாடில்ல)
Sunday, October 19, 2008
டீக்கடை கார்னர்
அரசியல் வினோதம்
அன்புமணி ராமதாஸ்:
பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் கொண்டுவந்த மத்திய சுகாதாரதுரை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்க்கு நன்றி !நன்றி !! நன்றி!!!.
அவரது தந்தை ராமதாஸ் இடம் ஒரு கேள்வி?
தமிழகத்தில் "தீவிர மதுவிலக்கை" வலியுறுத்தும் நீங்கள் ஏன் புகைபிடிக்க "ஆயுள் கால தடை" விதிக்க உங்களது மகனை வலியுறுத்தவில்லை
Wednesday, August 6, 2008
ஆன்சைட் ஆப்பு
"Have you been to states before" ?
"No, Haven't yet". (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
"Any other country" ?
"No".
"What are you man, You have enough experience..Should have been to onsite atleast once"
"yeah…I could have been… But…"
-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..
"அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க"ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..
"ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு"……!!!!
-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை அளபறைய குடுத்திட்டிருப்பாங்க…
ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.
சரி ஆன்சைட்னா என்னாங்க?
ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னா…இந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு "எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு" மன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை) வாங்கற process தான் Onsite-Offshore co-ordination.
இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…
அப்படி போறதுனால என்னங்க…
நல்லா கேட்டிங்க….
** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!
** நம்ப negotiation skills ம், business communication ம் நல்ல இம்ப்ரூவ் ஆகும்!
** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.
** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்… அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.
அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா ஆர்குட்லயோ, பிக்காசலயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்…
இங்க அவனவன் 38 degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow fallல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.
மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource அ ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி…
மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்…மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரி… இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் resourse அ வெச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க…
ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு " நம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ல) இருந்த "வருமோவராதோ" ப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு "ஏங்கடாபோங்கடா" ப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் "I am Back" ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்கு "வார்த்தை தவறிவிட்டாய்"ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..
ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்…
மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… "ஒன் டே squad ல ரெய்னாவுக்கு பதில கைப்ப எதுக்கு எடுத்தாங்க" ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.
ஆன்சைட் போனவன் "அக்கறை சீமை அழகினிலே", நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்" பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளு "சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா", "இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேரு" ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.
சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ consulate ல submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்…அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!
இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி "விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்" சந்தோசமா இருப்பான். "இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25 வருஷ கனவு, தவம்"னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!
நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்…சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்…
இல்ல சினிமால சொல்றாப்ல "உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு" ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.. இப்போ அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும்…அப்டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான்…அவங்களும் monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த monday னு அவங்களும் சொல்ல மாட்டங்க நாமளும் கேக்க மாட்டோம்
வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவொடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு பர்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம்.Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.
இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுக…இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்…
திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க ஊர்ல இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க.. அவங்களுக்கு என்னன்னா நாம எதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனைச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலைய பாப்போங்கறது நமக்கு தான தெரியும்.
ஆனா ஒன்னுங்க இன்னிய வரைக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு-பூகோளம்-புவியியல் எதுவுமே இல்லைங்க.. சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்போட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. அந்த பரபரப்புல ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட சந்தோசமா உக்காந்து பேச முடியாது.
நாள்கணக்கு மணி கணக்கா ஆயிரும்…கெளம்ப வேண்டிய கடைசி நாளும் வந்திரும்…அந்த கடைசி நாள் இந்தியா பாகிஸ்தான் பைனல் ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வைச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரயா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டயும், உருண்டு பெரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு கடைசியா செய்ய வேண்டிய சீரு, அதாங்க நம்போட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு..அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மாறக்காம வாங்கி(கட்டி)ட்டு ("மச்சி, இன்னிக்காது எப்படியாச்சு அவ கிட்ட சொல்லிடு"… கதைகளும் கேப்புல கெடா வெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்க வரும்.
அதுதான் எல்லாம் கெடச்சிருச்சே அப்பறம் என்ன லைட்டான்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் இருக்கு…அது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி
Tuesday, April 22, 2008
குருவி படம் விரிவான கதை
வழக்கமான கதை அமைப்பில் வெளிவரும் படமல்ல "குருவி". படத்தின் கதாநாயகன் விஜய் மற்றும் கதாநாயகி திரிஷா இவர்களுக்கு இணையாக, இப்படத்தில் இரு குருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் "குருவி" யின் ஹைலைட்.
பச்சைப் பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும் ஒரு அழகிய கிராமமான "கிழக்குவயல்" தான் நம்ம விஜயின் சொந்த ஊர். அப்படினா இந்த ஊருக்கு மேற்கே இருக்கும் ஊருக்கு என்ன பேருன்னு சொல்லவேண்டிய அவசியம் இல்ல. ஆமா.. நீங்க நெனச்ச மாதிரி அது " மேற்குவயல்" தான். அதுதான் நம்ம திரிஷாவோட சொந்த ஊரு. அதுமட்டுமல்ல.. வழக்கமா எல்லா சினிமாலயும் வர்ற மாதிரி இந்த ரெண்டு ஊருக்காரங்களுக்கும் ஆகவே ஆகாது.
விஜயோட கிழக்குவயல்காரங்க எல்லாரும் குருவி வளர்க்கிறாங்க. இது இவங்க ஊரு பழக்கமாம். குருவி வளர்க்குறதுனா இவங்களுக்கு உயிராம்.
இந்த ஊருக்காரங்க வளர்க்கிற குருவிமேல பொறாமைப்பட்டு, திரிஷாவோட மேற்குவயல் காரங்க கிளி வளர்க்குறாங்க. எல்லாருடைய வீட்டுலயும் குறஞ்சது ரெண்டு கிளியாவது இருக்கும். இந்த ஊருக்காரங்க போன் கூட யூஸ் பண்ணமாட்டாங்களான். கிளிட்ட சொல்லிவிட்டா, அது போயி பக்கத்து தெருவில யாருட்ட போயி தகவல் சொல்லனுமோ, கரெக்டா போயி சொல்லிருமாம். கிரேட்ல.
ஒருநாளு, பக்கத்து டவுண்ல போயி, நம்ம விஜய் கத்திரிக்கா வியாபாரம் பண்ணபோறாரு. தெருத்தெருவா வியாபாரம் பண்ணிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கும்போது, எதிரில ஒரு பொண்ணு, கண்டாங்கி புடவை கட்டி, மிளகாய் பழம் மாதிரி சும்மா செக்கச்செவேனு மோரு வித்துக்கிட்டு வருது. ஆமா.. நீங்க நெனச்ச மாதிரி அது திரிஷாவேதான்.
இப்படி ரெண்டுபேரும் அடிக்கடி தெருவில சந்திச்சதுல, ரெண்டுபேரும் லவ்வுல விழுந்திடுராங்க.
இனிமேலதான் கதை சூடு பிடிக்கப்போகுதுன்னு, படத்தோட இயக்குநர் தரணி சொல்றாரு. ம்..ம்.. அதையும்தான் பார்ப்போமே..
குருவியே வளர்க்கக்கூடாது; எல்லாரும் கிளிதான் வளர்க்கனுங்கிற கொள்கையில இருக்கிற மேற்குவயல் ஊருல, நம்ம திரிஷா மட்டும் குருகி வளர்க்க ஆரம்பிக்குறாங்க. எல்லாம் விஜய் மேல இருக்கிற லவ்வுதான் காரணமாம். இப்படி ஊர்க்கட்டுப்பாட எதிர்த்து திரிஷா குருவி வளர்க்குறது பிடிக்காம, வில்லன் திரிஷாவோட குருவிய தூக்கிக்கிட்டு பக்கத்துல இருக்கிற காட்டுக்குள்ள ஓடிடுறான்.
இதக்கேள்விப்பட்ட நம்ம ஹீரோ விஜய், தன் வீட்டுல வளர்க்கிற குருவி மேல ஏறி, திரிஷாவோட குருவியை தேடுறாரு. பகலெல்லாம் தேடிய களைப்புல, கொஞ்சம் அசந்து இருக்கும்போது, ஒரு பருந்து வந்து விஜயோட குருவியை தூக்கிக்கிட்டு போயிருது. ஹீரோ விஜய், அந்த பருந்து பின்னாலயே போயி, அதோட சண்ட போட்டு, தன்னோட குருவிய மீட்டுடுறாரு. அந்த பருந்த அடிச்ச அடில, அது எல்லா உண்மையையும் சொல்லிருது. வில்லன் அனுப்புன ஆளுதான் நானு; வில்லன் எந்த இடத்துல இருக்காருங்குறதையும் சொல்லிருது.
விஜய் திரும்பவும், தன்னோட குருவி மேல ஏறி, வில்லனை தேடிக் கண்டு பிடிச்சி, சண்டை போடுறாரு. நடந்த துப்பாக்கிச் சண்டையில, வில்லன் சுட்ட எந்த குண்டும் இவ்வளவு பெரிய விஜய் மேல படவே இல்ல. ஆனா, பாவம் அந்த திரிஷாவோட சின்ன குருவியோட கால்ல குண்டடி பட்டுறுது. நல்ல வேளை ஹார்ட்ல படல.
விஜய் வில்லன அடிச்சுப் போட்டுட்டு, அந்த குருவியத் தூக்கிக்கிட்டு, தன்னோட மருத்துவமனைக்கு கொண்டுவந்து, ஆபரேசன் பண்ணி, அந்த குருவியக் காப்பாத்தி, திரிஷா கையில குடுக்குறாரு.
முடிவு: உனக்கு எப்டி ஆபரேசன் பண்ண தெரியும்னு த்ரிஷா கேக்குறாங்க. உடனே நான் டாக்டர்.விஜய்னு சொல்றான். அத்த கேட்டு குருவி அண்ட் த்ரிஷா 3 பெரும் செத்து போறாங்க .
குருவி படம் கதைசுருக்கம்
விஜயும் த்ரிஷாவும் லவ் பண்றாங்க. விஜய் வீட்டில இருக்கற ஆம்பல குருவியும், த்ரிஷா வீட்டில இருக்கற பொம்பள குருவியும் லவ் பண்ணுது. த்ரிஷா வா வில்லன் தூக்கிட்டு போறான், விஜய் குருவிய காக்கா தூக்கிட்டு போகுது. குருவி, த்ரிஷா 2 பேரயும் விஜய் தேடுரார். குருவிய தூக்கிட்டு போன காக்கவ கண்டுபிடுச்சு ஒரு ஃபைட் பண்றார். வில்லன் தான் குருவிய கடத்த சொன்னாண்னு உண்மையா காக்க சொல்லுது. விஜய், காக்க மேல ஊட்காந்து வில்லன் வீட்டுக்கு போய் ஃபைட் பண்றார். கடைசில வில்லன், குருவிய கத்தியால குத்தி விடுகிறான் . ஆனா விஜய் ஆபரேசன் பண்ணி காப்பத்துரார் .
முடிவு: உனக்கு எப்டி ஆபரேசன் பண்ண தெரியும்னு த்ரிஷா கேக்குறாங்க. உடனே நான் டாக்டர்.விஜய்னு சொல்றான். அத்த கேட்டு குருவி அண்ட் த்ரிஷா 3 பெரும் செத்து போறாங்க .
BCCI யின் செயல்பாடுகள்
மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.
இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைக்காத அங்கீகாரம், புகழ், பணம், லைம் லைட் வெளிச்சம் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது என்னவோ கிரிக்கெட்டில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டையும் Represent செய்வதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் BCCI யின் செயல்பாடுகள் சமீப காலமாய் கட்டுக்கடங்கா சர்வாதிகாரத் தன்மையுடன் சென்று கொண்டிருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. அணி வீரர்களுக்கு என்று அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளும், தேர்வு செய்வதற்கு என்று தங்களுக்குள் கடைபிடிக்கும் சில எழுதப் படாத சட்ட திட்டங்களும் வெகு நிச்சயமாய் BCCI யின் மீது வெறுப்பைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.
இந்திய அணித் தேர்வில் Transparancy இருக்க வேண்டும் என்ற குரல் அவ்வப் போது கடும் கோபத்துடனும், வேகத்துடனும் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றது. இது மட்டுமின்றி இந்திய மைதானங்கள், உள்ளூர் போட்டிகள், ஃபாஸ்ட் பவுலிங் பிட்சுகள் போன்ற பல விஷயங்கள் குறித்தான BCCI யின் மீதான பல கேள்விகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து, சமாதானமாகவோ, தீர்வாகவோ எந்த ஒரு பதிலையும் இது வரை எவரும் பெற்றிருக்க வில்லை. ஒரு வேளை BCCI விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களோ???
கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் ஒருவர், பல மாத காலம் ஃபார்மில் இல்லை என்று சொல்லி கழட்டி விடப்பட்ட பின்பும், பல போராட்டங்களிற்குப் பின்பு அணியில் இடம் பிடித்து, தன்னுடைய திறமையை, கோபத்தைக் காட்டியவர், ஒரு கால கட்டத்தில் படு மோசமாய்ச் சொதப்பிக் கொண்டிருந்த இந்திய அணியை,தலைமைப் பொறுப்பேற்று, ஒரு மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தவர், யுவராஜ், சேவாக், கைஃப், ஸாஹீர், ஹர்பஜன் போன்ற பல வீர்ர்களை வளர்த்தெடுத்தவர், ” Even I would like to die for such a captain” என்று இன்றும் யுவராஜால் மிக மரியாதையாக பார்க்கப்படும் ஒரு வீரர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் தேர்வுக்குழு தயவு தாட்சணையின்றி ஒரு சிறந்த வீரரை, அதுவும் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அதிக பட்ச ஃபார்மில் இருக்கும் போதே நீக்கி இருக்கின்றது.
வெறுமனே சில மாதங்களிற்கு முன்பு பேட்டிங்கின் மூலம் இன்னும் அதிக பட்சமாக தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பிலிருந்து தானாக முன் வந்து விலகி இருந்திரா விட்டால், தான் அணியில் இடம் பெறுவோமோ மாட்டோமா என்ற கவலையுடன் டிராவிட் இப்போது உட்காந்திருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது. அவரை கழட்டி விட்டிருக்கும் இதே தேர்வாளர்கள், ஒன்று சேர்ந்து டிராவிட் இந்த மூன்று நாடுகள் மோதும் போட்டியில், இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.
கிரிக்கெட் கான்ட்ரவெர்சியில் சித்து சொன்னது போல தோனிதான் இப்படி விரும்பினார் என்று காரணம் சொல்வதாய் இருந்தால், அணித் தேர்வாளராக அவரையே நியமித்து விடலாமே? அப்புறம் எதற்கு வெங்சர்காரும், ராஜூவும்???
இந்திய அணியை விமர்சித்து நல்வழிப் படுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த வெங்சர்கார், ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்றோர் மீது என் தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் என நான் வைக்க விரும்புவது நிறைய்ய இருக்கிறது. வெங்சர்கார் தான் ஆர்ட்டிகிள் எழுத கூடாது என்று BCCI சொன்னால் அதை ஈகோ, பிரச்சினையாக பார்ப்பார். ரவி சாஸ்திரியை இந்திய அணி மேனேஜராய் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்தச் சொன்னால், முன் வர மாட்டார். ஆனால் கமெண்டரி பாக்ஸில் உட்கார்ந்துக் கொண்டு கொடுத்த காசுக்கு மிச்சமாய் கூவச் சொன்னால் சந்தோஷமாய் செய்வார். இவர்கள் எவரும் தனது தனிப்பட்ட வருமானத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, ஒரு பொழுது போக்கைப் போல இந்திய அணியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று அவ்வப் போது தோன்றுவதுண்டு.
உலக கிரிக்கெட்டிலேயே மிக லாபகரமான ஒரு அமைப்பாக கருதப் படுவது BCCI தான். ஆனால் BCCI யின் செயல்பாடுகளை சொல்ல சொந்தமாய் ஒரு இணையத் தளம் கூட இன்னும் ஆரம்பிக்காதது, திட்டமிட்டே Transparant முறையை தவிர்க்கும் பொருட்டுதானோ என்று தோன்றுகிறது. http://bcci.cricket.deepthi.com யை விடுங்கள். அது சொந்தத் தளம் இல்லை.
சில காலங்களிற்கு முன்பு, பல வருடங்களாய் எதிர் கேள்வியில்லா தலைவராய் இருந்து வந்தார் ஜக்மோகன் டால்மியா. தனது பதவிக்காலம் முடிந்தும், தன் ஈகோவைத் திருப்தி செய்து கொள்ள கௌரவத் தலைவர் என்று புதிதாய் ஒரு பதவியை ஏற்பாடு செய்து, ஏகபோக ஆட்சி செய்து வந்திருக்கிறார். பின்பு அதுவே பல பிரச்சினைகளுக்குப் பின்பு தேர்தல் நடத்தப் பட்டு சரத் பவார் கையில் கொடுக்கப் பட்டது. அவரது காலத்திலும் சரி, பவாரின் காலத்திலும் சரி BCCI ல் பிரச்சினைகளுக்கு மட்டுமே பஞ்சமே இருந்ததில்லை.
இந்திய கிரிக்கெட் மைதானங்கள் பேட்டிங்குக்கு சாதகமாய் இருக்கும் சூழ்நிலையை மாற்றி, முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாய் சில மைதானங்களை அமைக்க வேண்டும், அதன் மூலம் இந்திய வீரர்களை அயல் நாட்டு மைதானங்களிற்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும், 125, 132 கி.மீ வேகங்களைத் தாண்டி, 140ஐ சர்வ சாதாரணமாய்த் தொடும் வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும், பலகாலமாய் நடத்தி வரும் (அலுத்துப் போன) 5 நாட்கள் விளையாடும் ரஞ்சிப் போட்டி மட்டுமல்லாது, ஒரு நாள் போட்டி, 20 ஓவர், 40 ஓவர்கள் கொண்ட பல்வேறு வகை மாறுபட்ட போட்டிகள் நடத்தவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பல காலமாய் எழுப்பப் பெற்று வந்தாலும் அதை மதிக்காமல் இருந்து வந்த BCCI, திடீரென்று ஏற்படுத்தப்பட்ட ICL ன் அறிவிப்புகளுக்குப் பின்புதான், அவசர அவசரமாய் முழித்துக் கொண்டு, இனி நாங்களும் இது போன்ற போட்டிகளை நடத்துவோம் என்று அறிவிப்பு செய்கிறது.
இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வாங்கித் தந்தவர், இன்றுவரை தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர், 16 வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தவர், 5 வருடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாய் இருந்து வழி நடத்திய மிகச் சிறந்த முண்ணனி வீரராக கபில்தேவ் இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் பொருட்டு, ICL என்று ஒரு அமைப்பு தொடங்கக் கூடாதா? ICL ல் பங்கு பெறும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப் பட மாட்டார்கள் என்று சர்வாதிகாரத்துடன் BCCI அறிவித்த போது கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே பார்வையாளராகத்தானே பலரால் இருக்க முடிந்தது. தான் விருப்பப் பட்ட அணிக்கு விளையாடும் உரிமையை பெற்றுத் தராமல் அப்புறம் எதற்கும் நாம் ஜனநாயகத்தைப் பற்றியும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும்???
இதே கிரிக்கெட் காண்ட்ரவெர்சியில் சில மாதங்களிற்கு முன்பு, எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கிரிக்கெட் மட்டுமே மூச்சாக இருந்து வந்திருக்கிறேன். இப்போது என்னால் ஆர்ட்டிக்கிள் எழுதியோ, வேறு ஏதேனும் வகையிலோ, அதிகமாய் பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அது எதுவுமே, இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் இந்த பொறுப்பிற்கு ஈடாகாது. என்னுடைய 16 வருட பங்களிப்பிற்குப் பிறகும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான் கிரிக்கெட்டில் ஈடுபட கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? என்று கபில்தேவ் உணர்ச்சியுடன் கூறிய போதும், பதில் சொல்ல கையாலாகத BCCI அதே விடாப்பிடியுடன்தான் இருந்து வந்திருக்கிறது.
உங்களில் எவரேனும் இளம் வீரர்கள் தேவைதானே? மூத்த வீரர்களை அதிரடியாக நீக்கினால் அப்படி என்ன தவறு என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேறு எவரையும் விட சிறப்பான முறையில் பல வருடங்களாய் உழைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நீ எனக்கு தேவையில்லை என்று நிராகரிக்கப் படுவதனால் ஏற்படும் வலியை உங்களால் உணர முடியுமாயின், இதனையும் நீங்கள் உணரலாம்.
என்னுடைய மற்றும் உங்களுடைய எதிர்க்குரல்கள் பெரிய அளவில் மாற்றத்தை உண்டு பண்ணாமல் போகலாம். நாளை இந்த இளம் அணியினர் கூட எப்படியாவது போராடி வெற்றிகளைப் பெற்றுத் தரலாம். நாமும் கூட வழக்கம் போல் பழையதை மறந்து அடுத்த மேட்சை பார்க்க நம்மை தயார் செய்து கொள்ளலாம். ”யங்ஸ்டர்ஸ் கூட பரவாயில்லைப்பா, சுமாரா விளையாடுரானுங்க” என்று ஓவர்களின் நடுவே பேச்சுகளை பரிமாறிக் கொள்ளலாம்.
ஆனால் எது நடந்தாலும் ஒன்றை மாற்ற முடியாது. மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.
நேற்று கபில் தேவ். இன்று கங்குலி மற்றும் டிராவிட். நாளை அது சச்சினாகவோ, யுவராஜாகவோ, ஏன் தோனியாகக் கூட இருக்கலாம்.
மணி கட்ட ஆளில்லாமல் அப்போதும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கும். நாம் வழக்கம் போல் அடுத்த போட்டியைப் பார்க்க தயாரகிக் கொண்டிருப்போம்.
click here to see original content
Monday, April 14, 2008
யாரடி நீ மோகினி
கதை
தறுதலையா இருக்குற தனுஷ், நயன்தாராவப் பார்த்து, காதலாகி, கசிந்துருகி, டூயட் எல்லாம் பாடி, பின்ன, நயன் வேலை பார்க்குற மென்பொருள் நிறுவனத்துலயே வேலைக்கு சேருறாரு. புரொஜெக்ட்டுக்காக ஆஸ்திரேலியா போன இடத்துல காதல சொன்னா, நயன் மறுத்துடுறாங்க! பின்ன மகன் தனுஷ்-க்காக நயன் கிட்ட பேசப்போன ரகுவரனயும் அவமானப்படுத்தி அனுப்பிடுறாங்க! இதனால, ரகுவரன் இறந்துடுறாரு. (கவரிமான் பரம்பரை!?) சோகத்துல இருக்குற தனுஷ தேத்தறதுக்காக, தனுஷோட நண்பன் கார்த்திக் தன்னோட கல்யாணத்துக்காக, தனுஷ சொந்த ஊருக்கு கூட்டிட்டு போறாரு. அப்பதான் தெரியுது மணப்பெண்தான் நயன்தாரன்னு!! இறுதியில ரெண்டு பேரும் சேந்தாங்களா இல்லையான்னு மீதிப் படத்துல சொல்லியிருக்காங்க!
காதுல பூ:
1) தேவை இல்லாத சண்டை காட்சி
2) வயலில் பாம்பினை பொடலங்காய் என எடுப்பது, அதை ஒட்டிய காட்சிகள்
3) தேவையில்ல நயன்தாரா மது பணம் அருந்தும் காட்சி, அதை ஒட்டிய காட்சிகள்
4) ஒரு பட்டன் தட்டிய உடன் எல்லா காம்ப்யூடர் பழுது ஏற்படுவது அதை தனுஷ் முறியடிபபது.
5) தனுஷ், ஸ்ர்ட் இல்லாமல் வரும் காட்சிகள்
6) நயன்தாரா காதலிப்பது ஏன்? தெளிவான காரணம் இல்லாமை
7) நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யாவுக்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்
8) பீச் பாடல் மற்றும் ரயில் பாடல்
9) பல கீழ்தரமான காமெடீ காட்சிகள்
10) தெளிவான முடிவு(climax) இல்லாதது
+
1) நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யா சில இடங்களில் நயன்தாராவிற்கு அக்காவாகிறார் நடிப்பில்.
2) ரகுவரன்
3) பாடல்கள்
4) ஒரு சில காமெடி காட்சிகள்
சரியான தொடக்கம் சரிவான முடிவு
Saturday, April 12, 2008
`சந்தோஷ் சுப்ரமணியம்' போல் இனி அமையாது -ஜெயம் ரவி சொன்னதும் - சொல்ல நினைத்ததும்
சொன்னதும்
`சந்தோஷ் சுப்ரமணியம்' சிறப்பாக வந்திருக்கும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார் ஜெயம் ரவி. ஒரு நிறைவான படத்தை முடித்த பூரிப்பில் இருந்த ஜெயம் ரவி உடன் ஒரு சந்திப்பு...
`சந்தோஷ் சுப்ரமணியம்' பற்றி...?
இந்தப் படம் எனக்கு முக்கியமானது. இப்படியொரு படத்தில் நான் நடித்ததில்லை. என் அண்ணன் ராஜாவும் இப்படியொரு படத்தை இயக்கியது இல்லை. என்னுடைய இளமையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமோ அதை இதில் செய்திருக்கேன். இதுபோன்ற ஒரு படம் எனக்கோ, என் அண்ணனுக்கோ இனி அமையாது. நான் வேறு நல்ல கேரக்டர்களில் நடிக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு இனி திரும்பக் கிடைக்காது.
அண்ணனுடன் பணிபுரியும் அனுபவம் எப்படிப்பட்டது?
ராஜா என்னுடைய அண்ணன் என்றாலும் கொஞ்சம் கூட அவரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. அவருக்குத் தேவையான நடிப்பை வாங்கிய பிறகே நம்மை விடுவார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு மூன்று அண்ணன்கள். சொந்த அண்ணன் ராஜா, சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஒரிஜினல் பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அப்புறம் என்னோட கேரக்டரில் நடித்த சித்தார்த்.
இந்த மூன்று பேரின் உழைப்பை நான் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரதிபலித்திருக்கிறேன், அவ்வளவுதான்.
படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயம்?
இந்தப் படத்தில் நடித்த ஜெனிலியா, சந்தானம், பிரேம்ஜி, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர்னு எல்லோருமே ஒரு குடும்பம் போல இருந்தோம். அந்த அனுபவம் மறக்க முடியாது.
`சந்தோஷ் சுப்ரமணியம்' எந்த மாதிரி படம்?
எல்லாரும் பார்க்கக் கூடிய வகையிலான சிறப்பு அம்சங்கள் இந்தப் படத்துல இருக்கு. குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கலாம். அதுக்கு எங்கள் யூனிட் கியாரண்டி. அந்தளவு தரமான படமா உருவாக்கியிருக்கோம். கண்டிப்பா இந்தப் படமும் வெற்றி பெறும்.
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?
'தாம் தூம்' படம் முடிஞ்சிருக்கு. `பேராண்மை'யில் நடிச்சிட்டிருக்கேன். அடுத்து அமீர் டைரக்ஷனில் `கண்ணபிரான்' படத்தில் நடிக்கிறேன்.
check the original link : http://tamil.in.msn.com/entertainment/interviews/article.aspx?cp-documentid=1311787
சொல்ல நினைத்ததும்
`சந்தோஷ் சுப்ரமணியம்' பற்றி...?
இந்தப் படம் எனக்கு முக்கியமானது. இப்படியொரு கேவலமான படத்தில் நான் நடித்ததில்லை. என் அண்ணன் ராஜாவும் இப்படியொரு படத்தை இயக்கியது இல்லை (மக்கள்:அப்புறம் ஏண்டா இயக்குனீங்க)
. என்னுடைய இளமையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமோ அதை இதில் செய்திருக்கேன்.இதுபோன்ற ஒரு படம் எனக்கோ, என் அண்ணனுக்கோ இனி அமையாது(மக்கள்:அப்பாடா நிம்மதி டா). நான் வேறு நல்ல கேரக்டர்களில் நடிக்கலாம்(மக்கள்:நீ என்ன சொல்ல வர்ரெ?). ஆனால் இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு இனி திரும்பக் கிடைக்காது(மக்கள்:உங்க அண்ணன் இந்த படத்தையே ரீமேக் பண்ண சொல்லு நீ தான் ஹீரொ ஓகே வா).
அண்ணனுடன் பணிபுரியும் அனுபவம் எப்படிப்பட்டது?
ராஜா என்னுடைய அண்ணன் என்றாலும் கொஞ்சம் கூட அவரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது(மக்கள்:ஏன் எல்லா படத்தையும் ரீமேக் பண்றான்ல அப்புறம் எப்படி எதிர்பார்க்க முடியும்
). அவருக்குத் தேவையான நடிப்பை வாங்கிய பிறகே நம்மை விடுவார் (மக்கள்:எங்கே இருந்து வாங்குவார் கதை வேற மொழியில் இருந்து,நடிப்பு ?). இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு மூன்று அண்ணன்கள். டப் (sorry)சொந்த அண்ணன் ராஜா, சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஒரிஜினல் பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அப்புறம் என்னோட கேரக்டரில் நடித்த சித்தார்த் (அப்ப ஜெனிலியா உனக்கு அண்ணி,because அவ சித்தார்த் ஆளு பொம்மரிலு படத்துல).
இந்த மூன்று பேரின் உழைப்பை நான் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரதிபலித்திருக்கிறேன், அவ்வளவுதான்.
படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயம்?
இந்தப் படத்தில் நடித்த ஜெனிலியா, சந்தானம், பிரேம்ஜி, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர்னு எல்லோருமே ஒரு குடும்பம் போல இருந்தோம். அந்த அனுபவம் மறக்க முடியாது(மக்கள்:டப் king அண்ணன் ராஜா இல்லையா ) .
சந்தோஷ் சுப்ரமணியம்' எந்த மாதிரி படம்?
எல்லாரும் பார்க்கக் கூடிய வகையிலான சிறப்பு அம்சங்கள் இந்தப் படத்துல இருக்கு(மக்கள்:என்ன வேன பண்ணு ரெண்டு ஃபைட் நாலு பாட்டு ஒரு இந்தெர்வல் இருக்குல்ல). குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கலாம். அதுக்கு எங்கள் யூனிட் கியாரண்டி(மக்கள்:உன் அண்ணன் கரண்டி). அந்தளவு தரமான படமா உருவாக்கியிருக்கோம்(மக்கள்:தரமானா கீழ் தரமாவா
). கண்டிப்பா இந்தப் படமும் வெற்றி பெறும் (மக்கள்:எந்த படம் வெற்றி பெற்றது னு சொல்றீங்க நா).
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?
'தாம் தூம்' படம் முடிஞ்சிருக்கு. `பேராண்மை'யில் நடிச்சிட்டிருக்கேன். அடுத்து அமீர் டைரக்ஷனில் `கண்ணபிரான்' படத்தில் நடிக்கிறேன்(பாவம் உன் அண்ணன் அவன் படம் எடுக்ககளிய).
Thursday, April 3, 2008
Software Engineer and his Wife
Conversation between a software engineer and his wife
Husband - hey dear, I am logged in.
Wife - would you like to have some snacks?
Husband - hard disk full.
Wife - have you brought the saree.
Husband - Bad command or file name.
Wife - but I told you about it in morning
Husband - erroneous syntax, abort, retry, cancel.
Wife - hae bhagwan !forget it where's your salary.
Husband - file in use, read only, try after some time.
Wife - at least give me your credit card, i can do some shopping.
Husband - sharing violation, access denied.
Wife - i made a mistake in marrying you.
Husband - data type mismatch.
Wife - you are useless.
Husband - by default.
Wife - who was there with you in the car this morning?
Husband - system unstable press ctrl, alt, del to Reboot.
Wife - what is the relation between you & your Receptionist?
Husband - the only user with write permission.
Wife - what is my value in your life?
Husband - unknown virus detected.
Wife - do you love me or your computer?
Husband - Too many parameters.
Wife - i will go to my dad's house.
Husband - program performed illegal operation, it will Close.
Wife - I will leave you forever.
Husband - close all programs and log out for another User.
Wife - it is worthless talking to you.
Husband - shut down the computer.
Wife - I am going
Husband - Its now safe to turn off your computer
Wednesday, March 19, 2008
விஜய் டிவி கடுப்பு நம்பர் 1 சீசன் 3.
இவங்க அலம்பல் தாங்கலயே சாமி.. என்ன கொடுமைடா இது.
விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தது, அதன் பின் நடத்தப்பட்ட ஜோ. நெ. 1 சீசன் 2 வில் பிருத்திவி, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இடையே நடந்த கூத்து மிக பிரபலம்.
அனைத்து தரப்பிலும், பத்திரிக்கைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு அதுவே அந்த நிகழ்ச்சிக்கு ஒரு விளம்பரமாக அமைந்து TRP ரேட்டிங்கில் ஏற்றம் காண்பித்தது.
இயல்பாக நடந்தது என்றும், இல்லை திட்டமிட்ட நாடகம் என்றும், பிருத்திவியை ஓரம்கட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சிம்பு , மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து கொடுத்த நெருக்கடி அது என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எப்படியோ, அனைத்து களேபரங்களுடன் நிகழ்ச்சி முடிந்து அடுத்த சீசன் 3 ஆரம்பானது சற்று ஆறுதல்.
சிம்பு மட்டுமன்றி மற்றொரு ஜட்ஜ் சங்கீதா, தொகுப்பாளினி டி.டி செய்கின்ற அலம்பல் தனிக்கதை.
இதோ மீண்டும் அதே போல ஒரு நாடகத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது.. கடந்த இரண்டு எபிசோடுகளில் ஜீவா மற்றும் அவருடன் நடனம் ஆடும் ஜோடி இருவருக்கும் பிரச்சனை. ஜீவா ஒத்துழைக்கவில்லை என அவர் வழக்கம் போல கண்ணீர் விட. இந்த வாரம் நடுவர் எஸ் ஜே சூர்யா தலையிட்டு ஜோடிகளை மாற்ற, வழக்கம் போல் விஜய் டீவி, சோக கீதம் , அதிர்ச்சி கீதம் வாசித்து, நான்கு பேர் அழுவதை காண்பித்து, குழு குழுவாக விவாதிப்பதை காண்பித்து, இறுதியில் ஜீவா நிக்ழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டார்..
தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல், தாங்கள் நடிக்கும் சீரியலில் செய்வது போலவே, இங்கும் மேடையில் ஓ வென ஒப்பாரி வைக்கும் இவர்கள் ஏன் போட்டிக்கு வர வேண்டும். அதிலும் 10 லட்சம் பரிசு என அறிவித்த பிறகு இது போன்ற ஒப்பாரி அதிகமாகிவிட்டது..
சீரியல் கில்லர்களே.. சாரி, சீரியல் நடிகர்களே, அங்கே மட்டும் நடியுங்கள் போதும்.
சென்ற முறை விளம்பரத்திற்கு கைகொடுத்த அதே யுக்தி இந்த முறையும் சற்று மாற்றம் செய்யப்படு கையாளப்படுகிறதோ என தோன்றுகிறது..
பங்கேற்ப்பாளர்கள் , நடுவர்கள் , நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அனைவரும் ஓவராக உணர்ச்சிவயப்படுவது என்பது விஜய் டீவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமீபகாலமாக தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது..
நடன நிகழ்ச்சியின் விளம்பரத்தில் , நடனத்தை பிரதானமாக காட்டாமல் இது போன்ற உணர்ச்சிவயபட்ட காட்சிகள், பரபரப்பு விவாதங்களையே பிரதானமாக 30 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டுவது, விஜய் டீவி இது போன்ற சலசலப்பை தூண்டிவிட்டு, அதில் வியாபார குளிர் காய்வதாகவே தெரிகிறது.
ஏற்கனவே விஜய் டீ வி தன் நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் தோல்வியில் அழுவதை க்ளோசப்பில் , சோக இசையுடன் காட்டுதல், தொகுப்பாளினிகளின் ஆடைக்குறைப்பு போன்றவற்றால் நிகழ்ச்சியை ஓட்டுகிறது. இதில் இப்போது இது ஒரு புது ட்ரெண்ட்..
பொழுதுப்போக்கு நிகழ்ச்சியை, பொழுதுப்போக்கு அம்சங்களுடன் நடத்தாமல் , இப்படி உணர்ச்சித்தூண்டுதல் முறையில் நடத்தும் டரெண்ட் நல்லதல்ல என்பதை எப்போது அந்த தொலைக்காட்சி புரிந்துக்கொள்ளப்போகிறதோ??
ஜோடி நம்பர் 1 now பொய் நம்பர் 1
வர வர இந்த விஜய் டிவி தொல்லை தாங்க முடியலே. ஏற்கனவே இந்தத் தொலைக்காட்சி, தமிழ் தெரியாத தமிழர்களுக்குன்னு ஆயிப் போச்சு. ஒரு கிராமாத்தானா, இந்த டீவியே எப்படிப் பாக்குறதுன்னு எனக்குத் தெரியல்ல.
இதில் வருகிற ஒரு நிகழ்ச்சி 'ஜோடி நம்பர் 1'. இது அப்பட்டமான அமெரிக்கத் தொலைக்காட்சியின் தழுவல். இது, 'dance with stars', 'do you think you can dance' போன்ற நிகழ்ச்சிகளின் காப்பி. ஆனா, காப்பி அடிச்சாலும், ஒழுங்கா காப்பி அடிக்கனும். சொந்தப் புத்தியில் எதுவும் அளிக்க இயலாத நம் 'தமிழ்' தயாரிப்பாளர்கள் (குறிப்பா, விஜய்). அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காப்பியடித்துக் கொடுப்பது, இப்போது தொடரும் நிகழ்வாகி விட்டது. அமெரிக்காவில், இந்த நிகழ்ச்சிகளின் போது, அழுமூஞ்சி போட்டியாளர்கள் நடத்தும் நாடகங்கள், நம் தமிழ் நிகழ்ச்சிகளில், இயக்குனரால் சொல்லிக் கொடுக்கப்பட்டு, மிகக் கேவலமாக நடிக்கப் படுகிறது.
சமீபத்தில், ஜீவா மற்றும் அந்த அழுமூஞ்சி போட்டியாளர் பங்கு பெறும் ஒரு preview to the show மாதிரி ஒரு கண்றாவி காண்பிக்கப்பட்டது. அதில், ஜீவா (யோவ், உனக்கு ரஜினி மாதிரி விட்டா வேறு எதுவும் தெரியாதா? கனாக்கானும் காலங்கள் கொடுத்த மரியாதை இதில் போய்விடும் போல் இருக்கு!), ரஜினி பாட்டைத் தவிர வேறு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று அழும்பு. அந்த அழுமூஞ்சி, காலில் விழுறேன், நான் தேர்ந்தெடுத்த பாட்டுக்கு ஆடுன்னு ஒரே நாடகம். இதில் என்ன ஒண்ணு தெரியுதுன்னா, இதுங்க எல்லாம் நடிக்குதுங்க. ஆனா, சீரியலில் சொதப்புற மாதிரி, ஒழுங்கா நடிக்கத் தெரியல. இல்ல, சொல்லிக்கொடுத்தத ஒழுங்கா பண்ணத் தெரியல. இது பதிவு பண்றது, இதுங்களுக்குத் தெரியாதாம். என்னங்கடா காதுல பூ மரமே வைக்கிறீங்க?
இதுங்க ஒரு வழியா 'ரிகர்சல்' பன்ணி முடிச்சுட்டு, ஆட வருதுங்கலாம். நடுவர்கள் சரியா மார்க் போடலியாம். மேடையில் இன்னும் ஒரு அழுகாச்சி. நடுவர்களின் முடிவு என்ன? அப்பிடின்னு ஒரு பின்குரல் வேற. ஏன்டா, தமிழனுங்கள எந்த அளவுக்கு கேணையனுங்களா ஆக்கனும்னு ஒரு விவஸ்தையே கெடையாதா?
ஏற்கனவே, விஜய் டீவி பாக்கிறவனுங்க தமிழ் மட்டும் தெரிஞ்சுருந்தா தொலைஞ்சானுங்க. பாதி, ஒரு எழவும் புரியாது. நிகழ்ச்சி குடுக்குறவனுங்க எல்லாரும், இங்லிஷ்காரனுங்களுக்கு (அதுவும் உருப்படியா இல்லை!) பொறந்த மாதிரி, பாதி இங்லிஷ் கலந்து பாதி தமிழ் (அப்பிடிதான் சொல்றானுங்க!) கலந்து ஒருத்தனுக்கும் புரியாத, தமிங்கலனுக்கு மட்டும் புரியுற மாதிரி பேசிகிட்டுத் திரியறானுங்க.
தமிழ் தெரிஞ்சவனும், ஏதோ தமிழில் பேசுனா கொன்னு போட்டுற மாதிரி, அறைகுறை ஆங்கிலத்தில் பேசி உயிர எடுக்குறானுங்க. ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, காபி வித் அனு, அறிந்ததும் அறியாததும் (தலைப்ப பாத்துட்டு ஏமாந்தவன்ல நானும் ஒருத்தன்), EQ2, திறந்திடு சீசேம் இது எல்லாமே தமிழ் மட்டும் தெரிஞ்சவனுக்காக அளிக்கப் படுபவை அல்ல. இப்பிடி சொல்லிகிட்டே போவலாம்.
நான் சொல்ல வறது என்னன்னா, தமிழகத்தில் தமிங்கலர்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைவு(கிராமங்களில்). தமிழர்கள்தான் அதிகம். அதற்குத் தகுந்த மாதிரி நிகழ்ச்சிகளை அளிக்க கொஞ்சம் விஜய் தொலைக்காட்சி முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், 'விஜய் டீவி. தமிங்கலர்களுக்கான டீவி' அப்பிடின்னு வெளிப்படையா விளம்பரம் செய்யனும்.
காசு சம்பாதிக்கிறதுக்காக, ஹிட் ரேட் ஏத்துறதுக்காக இந்த மாதிரிக் கேவல வேலைகளில் ஈடுபடக்கூடாது. ஒழுங்கான (தமிழ் மொழியின் சீர் குலையாத வண்ணம் ஓரளவு) நிகழ்ச்சிகளைக் கொடுக்க முன்வர வேண்டும். முடிந்த வரை சொந்தப் புத்தியில் புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யவேண்டும். கண்மூடித்தனமாக அமெரிக்கன் டீவிக்களை பின்பற்றக் கூடாது.
ஜோடி நம்பர் 1
அன்பு நேயர்களுக்கு,
விஜய் டிவியில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் 1 சீசன் 2 வில், வர வர நிறைய டிராமாக்களையும் பார்க்க நேரிடுவதைப் அறிவீர்கள். அதில் கடந்த வார போட்டியில் எலிமினேஷன் ஆன கிருத்திகா ஸ்ரீ ஜோடியில், கிருத்திகாவின் தாய் செய்த நாடகத்தை பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. போட்டி என்று வந்துவிட்டாலே அதில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். இது கூட தெரியாதவர்களா அவர்கள்.
இந்த வார போட்டியை பார்த்தால் அதைவிட மோசம், ஜட்ஜே தன்னை எலிமினேட் செய்துக் கொண்டதை பார்க்க அதைவிட வேடிக்கையாக இருந்தது. நடிகர் பிரித்திவிராஜ் கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது என்று தெரியவில்லை.அதை ஒரு பெரிய சீன் ஆக்கி விட்டார் நடிகர் சிம்பு, பார்க்க சிறு பிள்ளைதனமாக இருந்தது. ஜட்ஜுக்கு,நடனத்தில் நன்கு தேர்ச்சி இருந்தால் மட்டும் போதாது, நல்ல அனுமவமும் இருக்க வேண்டும்.இல்லையென்றால் இப்படிதான் அழுது புலம்பும் படி ஆகிவிடும்.
இந்த நிகழ்ச்சியை பார்த்துவரும் நேயர்களும், தங்களின் கருத்தை கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்,நன்றி.
Note : ஜோடி நம்பர் 1 : சீரியல்
Thursday, February 7, 2008
ஜாவா தமிழில் : Java in Tamil
Java in Tamil…!
public class Project
{
public static void main(String args[])
{
int a;
string b;
if(a==0)
{
b = "Zero";
}
else
{
b = "Non-Zero";
}
return;
}
}
if we write Java code in Tamil..
பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
பொது நிரந்திர ஒன்னும்மில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[])
{
எண்கள் அ;
கம்பி ஆ;
ஒருவேளை (அ == 0)
{
ஆ = "பூஞ்சியம்";
}
இல்லன்னா
{
ஆ = "பூஞ்சியம் இல்லை";
}
திரும்பி போ;
}
}
ரஜினி,விஜயகாந்தின் அடுத்த படங்கள்
ரஜினி: சிவாஜி,எம்ஜிஆர்,ஜெமினிகணேசன்,நாகேஸ்
விஜயகாந்த்: தர்மபுரி,மசாலாபூரி,சோலாபூரி,பானிப்பூரி
அஜித்: வரலாறு,புவியியல்,வேதியல்,தாவரவியல்
விஜய்: போக்கிரி,படவா,மொல்லமாரி,கேப்மாரி
சூர்யா: ஆறு,ஏழு,எட்டு ,ஒன்பது
ஜீவா: ஈ,எறும்பு,கொசு,கம்பளிபூச்சி,கரப்பான் பூச்சி
சரத்குமார்: தலைமகன்,வால்மகன்,கால்மகன்,கைமகன்
சிம்பு: வல்லவன்,பல்லவன்,பல்லுவிளக்காதவன்,கண்ணுதெரியாதவன்.
கொசுறு செய்தி:
அஜித்தின் 'வரலாறு புவியியல் குடிமையியல்' படத்தின் அபார வெற்றியை பார்த்த விஜய் தரப்பு பேரரசுவை வைத்து 'நான்கு கெட்டப்பில்' ஒரு படம் எடுக்க திட்டமுள்ளது.
மீசையை ட்ரிம் செய்து கலெக்டராக ஒரு கெட்டப்,முடியை கலரடித்து(காவி கலர்) ரவுடியாக ஒரு கெட்டப் கண்ணுக்கு லென்ஸ் ஆண்டி ஹீரோவா ஒரு கெட்டப்,இன்னும் ஒரு கெட்டப் பற்றி விவாதத்தில் இருக்கிறது விஜய் தரப்பு
பேரரசு டபுள் ஆக்சன் பண்ண போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் என்ன விஷேசம் என்றால் விஜய் செட்டில் இந்த கெட்டப்புகளில் அலைவதால் யாராலுமே அடையாளம் கண்டுபிடிக்க முடியலயாம்..அந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறாராம் விஜய்
Thursday, January 31, 2008
ஜெயா செய்திகள்
வணக்கம் ஜெயாடிவியின் தலைப்பு செய்திகள்
பெரும்பான்மை பலம் இல்லாத திமுக அரசு இயற்றும் சட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து.
நாம் இன்னும் தோற்கவில்லை. அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா உற்சாகம்
தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் அட்டூழியம்
கன்னியாகுமரியில் திமுகவினர் பயங்கர கொலைவெறி தாக்குதல்.வன்முறை.
சிறப்புச்செய்தி:கலைஞரின் கையாட்டு - பரபரப்பு செய்தி.
இனி விரிவான செய்திகள்:
பெரும்பான்மை பலம் இல்லாமல் பதவியேற்றுள்ள திமுக அரசு தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி.
அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருப்பது தேவையில்லை என்று கண்டித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டதை சுட்டிகாட்டினார்.அதே சமயம் தற்கொலை செய்து சாகும் அந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் கட்சியின் சார்பில் தரப்படும் என்றும் கூறி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கூறுகையில் இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும் கருணாநிதி காலையில் வந்து வெறும் கையெழுத்து மட்டுமே போடுவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அது சமயம் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
அஸ்ஸாமில் நேற்று இரவு அல்பைகுட்டி என்ற கிராமத்தில் இரண்டு மணிநேரம் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் என்ன செய்கிறார் என்று பொதுமக்களும் நடுநிலைமைவாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.
நேற்று கருணாநிதி தலைமை செயலகத்திற்கு வந்துகொண்டிருந்தபோது கடற்கரை சாலையில் ஒரு ஆளுக்கு கையாட்டி டாட்டா கூறினார். நமது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் கலைஞர் டாட்டா காண்பித்த தொண்ணூறு வயதான அந்த ஆளின் சகோதரர் 1967 ல் சிக்னல் இன்றி ரோட்டை கிராஸ் செய்த வழக்கில் அபராதம் கட்டியவர் என்று தெரியவந்தது.இது போன்ற கிரிமினல்களுடன் கருணாநிதி தொடர்பு வைத்திருப்பதுப்பற்றி நடுநிலையாளர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ட்ராபிக் சார்ஜென்ட்டுக்கள் மற்றும் அதிமுகவினரின் கருத்துக்கள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கலைஞரின் கையாட்டு என்ற பெயரில் உங்கள் ஜெயா டிவியில் காலையும் மாலையும் ஒளிப்பரப்பாகும்.
இத்துடன் ஜெயா செய்திகள் முடிவடைந்தன.
Friday, January 25, 2008
கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்
முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!
எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.
க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...
வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.
க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?
வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.
க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...
வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.
க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?
வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.
க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?
வி: என்னங்கணா?
க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...
வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.
க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?
வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)
க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!
வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி
க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...
வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.
க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.
வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...
க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?
வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)
இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)
க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?
வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல
க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?
வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.
க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?
வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.
க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...
க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?
வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை.
க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா?
வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...
க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு. அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க?
வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!!
க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம்.
வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.
க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?
வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!
க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா.
வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.
க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்?
வி: !@#$%
க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?
(விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)
க: சொல்லு மேன்!
வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது தமிழ்நாடுக்காக கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)
க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.
வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.
க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா.
வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?
க: அவன் எவன்டா?
வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். 'ஜ'ல ஆரம்பிச்சி 'னா'ல முடியும்.
க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?
வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.
க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?
வி: சரிங்கண்ணா.
க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?
வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.
க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.
வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!
க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா?
வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க.
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். ஆதி ஃப்ளாப் ஆயிடுச்சினு போக்கிரிய மிஸ் பண்ணிடாதீங்க...
க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...
(கவுண்டர் துரத்த... விஜய் எஸ்கேப் ஆகிறார்)
Wednesday, January 23, 2008
பில்லா 2007 சொட்டை மனோகர் டவுட்?
பில்லா படத்தை பற்றி எல்லோரும் அலசி காயப்போட்டு விட்டாங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை என்று ஆனபிறகு நாம என்னத்தை சொல்வது! பில்லா படம் சுமாராக இருக்க என்ன காரணம் என்று பாக்கலாம்.
கதை ஒன்றும் புதிய கதை இல்லை என்பதால் கதை பற்றி விமர்சனம் தேவை இல்லை.
படம் சுமாராக இருக்க காரணம் அஜித்தின் கடின உழைப்பு என்றால் மிகையாகாது. அப்படி என்னா உழைப்பு என்று நீங்ககேட்கலாம்.
1) வித விதமான கோட் ஷூட் போட்டுக்கிட்டு f tvயில் பசங்க கேட் வாக் போவாங்க (அத எப்ப நாம பார்த்து இருக்கோம், பொண்ணுங்க ஷோவுக்கு நடுவே விளம்பரம் போடுவாங்கஅப்ப பார்த்தது)அது போல நடக்க கடின பயிற்ச்சி எடுத்து இருக்கார்.
2) அதிகம் பேசாமல் இருந்து இருக்கிறார். (சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட்டரூரூரூ , நான் தானா வளர்ந்த காட்டு மரம் போன்ற தன் டயலாக் பேசி தன் திறமையை காட்டாமல் இருக்கிறார்)
3) பார்க்க அஜித் அழகாக இருக்கிறார்.
படத்தில் எனக்கு பிடித்தவை:
1)செய் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் பெண், ஹீரோயின் நயன் தாராவை விட அழகாக இருக்காங்க.
2)பின்னனி இசை
3)அஜித்தின் நடப்பு (நடிப்பு அல்ல).
சொட்டை மனோகர் டவுட்:
1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிருஸ்னாயில் வாங்கவா, இல்லை பெட்ரோல் வாங்கவா?
2) ஏம்மா நயன் ஏதோ முத்து குளிக்க போவது போல் உடம்ப ஒட்டி டிரஸ் போட்டு இருக்கீங்களே அது எதுக்கு?
3) பெண் டிரைவ் பெண் டிரைவ் என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தேடுறீங்க பெண் டிரைவ்வை தேடனும் என்றால் ரோட்டில் போய் நின்னா பெண் டிரைவை நிறைய பார்கலாமே!!!
கருத்து கந்தசாமி:
அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wired ஆனா படம் பார்க்கும் மக்கள் we are very tired என்று சொல்றாங்களே அது ஏனுங்கோ!!!
பழநி
”ஈஸியா சீவுறதுக்கு இளநின்னு நெனைச்சியா? பழனிடா” பேரரசுவின் ட்ரேட்மார்க் பஞ்ச் டயலாக்கோடு தொடங்குகிறது படம். சின்ன தளபதி பரத் (?) சரியாக முளைக்காத மீசையை வேறு முறுக்கிவிட்டிருக்கிறார். தாவூ தீருது இவுங்களாண்ட...
அப்பாவுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பெண்ணை சிறுவயதிலேயே கொலை செய்து ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ. இதனால் குடும்பம் சிதறுகிறது. தாய் இறந்துவிடுகிறார். கொலை செய்து குடும்பத்துக்கு அவப்பழி ஏற்படுத்திய தம்பி மீது அக்கா கோபமாக இருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பிய தம்பி அக்காவை சமாதானப்படுத்த தம்பி என்பதை காட்டிக் கொள்ளாமலேயே அக்கா வீட்டில் வேலைக்காரனாக வேலை செய்கிறார். அக்கா புருஷனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு. பிரச்சினைகளுக்கு ‘ஆப்பு' வைத்து குடும்பம் ஒன்றாகிறது. சல்பேட்டாவுக்கு தொட்டுக்க ஊறுகாய் மாதிரி அவ்வப்போது ஹீரோயின். அரதபழசலான மகாபாரத காலத்து கதைக்கு ஆங்காங்கே தொடர்பில்லாமல் ஆக்ஷன் பிட்டுகளை அள்ளித் தெளித்து கொத்து பரோட்டா போட்டுத் தந்திருக்கிறார் பேரரசு.
ரோடு ரோலர் சைஸில் குஷ்பு ஹீரோவுக்கு அக்காவாக வருகிறார். பரத்துக்கு நன்றாக டான்ஸ் ஆட வருகிறது. அடியாள்களை புரட்டியெடுப்பதும் ஓக்கே. படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்டாக ஐஸ்வர்யாவை (ராய் அல்ல) சொல்லலாம். கட்டை குரலில் மிரட்டுகிறார். சப்பென்று உயிரை விட்டு விடுகிறார்.
படத்தில் தனியாக காமெடியன்கள் யாரும் இல்லையென்ற குறையை இயக்குனரே போக்கிவிடுகிறார். போலிஸ் அதிகாரியாக ‘திருத்தணி' என்ற பெயரில் அவர் இடம்பெறும் ஒரே காட்சி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது. பாக்யராஜ் போல இருந்துகொண்டு பேரரசு பஞ்ச் டயலாக் பேசுவதைப் பார்க்கும்போது தமிழ் திரையுலகம் எதிர்காலத்திலும் கூட ஹாலிவுட் ரேஞ்சுக்கு போக வாய்ப்பில்லை என்றே அறிய முடிகிறது.
”இது ஆரம்பமில்லே.. பூகம்பம்” மாதிரி பட்டாசு டயலாக்குகளும், ”பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா சரியான ஆப்பு வைத்தாயப்பா” ரேஞ்சு பேக்கிரவுண்டு குத்துப்பாட்டுக்களும் தியேட்டரை விட்டு எல்லோரையும் கதிகலங்கி ஓடவைக்கிறது. படம் பார்க்கும் சில லேடீஸ் கூட புடவையை லுங்கி மாதிரி மடித்து கட்டிக்கொண்டு தம் அடிக்க வெளியே செல்லுமளவுக்கு பாடல்கள். இதே பார்முலாவில் தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருந்தால் பேரரசுவை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கோவணம் கூட மிஞ்சாது என்பது உறுதி.
பேரரசு ச(கா)ப்தம்
நெறய தமிழ் பட போஸ்டர்ல எல்லாம் பார்த்து இருப்பீங்க " இந்த பொங்கல்/தீபாவளிக்கு மிரட்ட வருகிறது " அப்படின்னு போட்டு படம் பேரு போட்டிருக்கும். ஆனா ஒரு படத்தோட டைரக்டர் பேரை கேட்டாலே அவனவன் மெரண்டு ஓடுறான்னா அந்தப் பெருமை நம்ம "பெருந்தொந்தரவு" பேரரசுக்கு மட்டும்தான். இவரோட முதல் படம் "திருப்பாச்சி" -க்கு நானும் நண்பன் ஹரியும் ஈரோடு அபிராமி தியேட்டருக்கு பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு நைட் ஷோ போய் உக்காந்தோம். இது நடந்தது ஒரு ரெண்டு வருசம் முன்னாடி.படத்துல முதல் ரெண்டு மூணு சீன் பாத்தவுடனேயே எங்களுக்கு நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்னு தெரிஞ்சிடுச்சு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்சு படத்துல சாமிக்கு ரெண்டு மூணு ஆடுங்கள பலி குடுக்கற சீன் வந்தது.எனக்கு என்னமோ அங்க ஆட்டு மூஞ்சிக்கு பதிலா ஹரியோட முகமும்,என்னோட முகமும் தான் தெரியுது. நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டு "ரைட்ரா , இன்னைக்கு என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துடலாம்னு " முடிவு பண்ணிட்டு ரெடி ஆயிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இளைய தளபதி முகத்துல சந்தனம் குங்குமம் பூசி அடையாளம் மாறுகிற சீன் வந்தப்போ எங்களால தாங்க முடியல. "சூப்பரப்பு"அப்படினு சொல்லிக்கிட்டு நல்லா கை தட்டி கெக்கே பிக்கேனு விழுந்து சிரிச்சுட்டு சுத்திப் பார்த்தா எல்லோரும் எங்களை ஒரு மாதிரி கொலை வெறியோட பார்க்குறானுங்க. "நண்பா, இடம், பொருள் ,நேரம் தெரியாம காமெடி பண்ணிட்டமோ" அப்படீனுட்டு அதுக்கு அப்புறம் ரொம்ப உஷாரா இருந்தோம்.A/C வேற நிறுத்திட்டானுங்க. அந்தக் கடுப்பு வேற.கொஞ்ச நேரம் கழிச்சு ஹரி ஆரம்பிச்சுட்டான். ஸ்கிரீன்ல படம் ஓடுறப்பவே இங்க கீழே திரை விமர்சனம் பண்ணி கிழிச்சு தொங்க விட்டுக்கிட்டு இருந்தான்.பாட்டெல்லாம் வேற "கீரைக்கட்டு, பக்கெட்டு, டிக்கெட்டு, ராக்கெட்டு" னு ரொம்ப இலக்கியத்தரமா இருந்ததுனால ஒண்ணும் முடியலை எங்களாலே.ஏதோ கும்பிடப்போன தெய்வம் தலைவி (Ex-தலைவி??) த்ரிஷா அப்பப்போ வெயிலுக்கு வேப்பங்காத்தா ( என்ன உவமை!. த்ரிஷாவை நினைச்சாலே பொங்கிட்டு வருது ) வந்து எங்களை காப்பாத்துனாங்க. ஒரு வழியா படம் முடிஞ்சு குத்துயிரும் குலையுயிருமா எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டோம். அன்னைக்கு முடிவு பண்ணுனதுதான்,இனி பேரரசு பக்கம் தலை வச்சு கூட படுக்கறது இல்லைனு.
ஆனா,நம்ம தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க ஆச்சே.அந்த படத்தையும் ஓட வச்சுட்டாங்க.நம்ம பேரரசுவும் கலைத்தாயை குரல்வளையை நெரிச்சுக் கொல்லாம விடுறது இல்லைங்கற முடிவோட அடுத்து மீண்டும் இளைய தளபதிய(அநேகமா இவரையும் அடுத்து ஹிட் லிஸ்ட்-ல சேர்த்தணும்னு நினைக்கிறேன்) வச்சு "சிவகாசி " படம் ,அதுவும் தீபாவளிக்கு. அந்த வருசத்துல இருந்து பொங்கல்,தீபாவளி வந்தாலே எங்க இந்த பேரரசு பய ஏதாவது படம் ரிலீஸ் பண்ணிடுவானோன்னு பயமாவே இருக்கு. இந்த படத்துல பேரரசு நடிச்சது மட்டும் இல்லாம இவருக்கு பன்ச் டயலாக் வேற.சீட்டுக்கு அடியிலே லக்ஷ்மி வெடி வெடிசச effect-லதான் எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தாங்க. " உங்கம்மா எங்கம்மா நம்மை சேர்த்து வைப்பாளா, சும்மா அட சும்மா நம்மை பெத்து விட்டாளா" அப்படினு பெற்றோர்களின் கடமையை விளக்கு வைத்து வெளிச்சம் போட்டு காட்டும் பாட்டு இந்த படத்தோட சிறப்பு அம்சம்.
இதுக்கு அடுத்து "தல" அஜீத் தெரியாம இவரை நம்பி "திருப்பதி " படம் குடுத்துட்டார்.இவரோ "தல"ய "தறுதல" ஆக்கிட்டார் இந்த படத்துல.இவரு ஏறக்குறைய ஹீரோ மாதிரி(உவ்வே சொல்லவே குமட்டிகிட்டு வருது) நடிச்சு அஜீத்தை காமெடியன் ஆக்கிட்டார்.இந்த படம் பார்த்த பீதியிலே, பேதி ஆகித்தான் பாலா "நான் கடவுள்" படத்துல இருந்து அஜீத்தை தூக்கிட்டதா ஒரு பேச்சு.
இதுக்கு அடுத்து நடந்ததுதான் பெஸ்ட் காமெடி.அடுத்த படம் "தர்மபுரி" அதுவும் யாரு கேப்டன் விஜயகாந்தை வச்சு. "சனி தனியா வந்தாலே சமாளிக்க முடியாது.இங்க துணைக்கு ஆள் கூட்டிக்கிட்டு வருதே"னு எங்களுக்கு கண்ணெல்லாம் இருண்டுடுச்சு.ஆனா இந்த படம் கேப்டனோட அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையா அமைஞ்சது.இனி இவன விட்டா இது மாதிரி நிறைய படம் நடிச்சு நம்மளை கொன்னுடுவான்னு மக்கள் உஷாராகி பேசாம இவரை M.L.A ஆக்கிட்டா படத்துல நடிக்க மாட்டார் நம்ம எஸ்கேப் ஆயிடலாம்னு ப்ளான் பண்ணி வோட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டாங்க.இந்த உண்மை புரியாம கேப்டன் இப்பவும் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் "என் அரசியல் வாழ்க்கையை தூக்கி விட்டதே தம்பி பேரரசுதான்னு கண்ணு கலங்கி சொல்லிக்கிட்டு இருக்காரு.
நம்ம ஆளை பத்தி இன்னும் நெறய சொல்லிக்கிட்டே போகலாம்.ஏதோ இப்போ தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சுதாரிச்சு கொஞ்ச நாளா இவர் படம் எதுவும் வராம நாட்டுல அமைதி நிலவுது.இருந்தாலும் இவர் கலைச்சேவை என்னோட வேற ஒரு பதிவுல சொன்ன மாதிரி "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" லெவல்ல நடந்துகிட்டுதான் இருக்கு. இதனால சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பேரரசு படம்னா அந்த படம் ஓடுற தியேட்டர் பக்கம் சூடம் காட்டி, தேங்காய் ஒடச்சு, பெரிய கும்பிடா போட்டுட்டு அப்படியே ஓடியே போயிடுங்க.மீறி படம் பாக்க போனா உங்க உயிருக்கோ,மனநல,குணநல மாறுதல்களுக்கோ யாரும் உததரவாதம் இல்லை.
பீமா
ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.
படத்தின் ஹீரோவாக அடித்திருப்பவர்...சாரி நடித்திருப்பவர் சேது,அந்நியன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கும் விக்ரம்.வில்லனாக நடித்திருப்பவர் பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன்.படத்தை இயக்கியிருப்பவர் ஆனந்தம்,ரன் இவற்றின் இயக்குனர் லிங்குசாமி.இப்படியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்கள்!!.
படத்தின் கதை...
சென்னையில் பணிபுரியும்(!) ஒரு நல்ல ரவுடி பிரகாஷ்ராஜ்.(காட்பாதர் மாதிரி, நாயகன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புறம் சரி வேண்டாம் விடுங்க)
இவர் போட்டுத்தள்ள நினைக்கும் ஆட்களை இவருக்கு முன் போட்டுத் தள்ளுகிறார் விக்ரம்.யாருடா நீ? என்று பிரகாஷ் கோபமாகக் கேட்க விக்ரம் உன்கிட்ட வேலைக்கு சேரணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.
வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே விக்ரமின் புஜபலபராக்கிரமத்தைப் பார்த்து "25 வருசங்களுக்கு முன்பு நான் என்னையே பார்த்த மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்படின்னு கேட்க... பிளாஷ்பேக்.
சிறுவனான விக்ரமிற்கு தப்புகளைத் தட்டிக்கேட்கும் பிரகாஷ்ராஜ் ஒரு ஹீரோவாகத் தெரிகிறார்.ஒரு கட்டத்தில் விக்ரமின் அப்பாவை அடித்தவர்களைப் பிரகாஷ் அடிக்க, விக்ரமும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிரகாஷ்ராஜ் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் வந்து சேர்கிறார்.
இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக அவர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காதலிக்கிறார்.
பிரகாஷ்ராஜின் எதிரி ரகுவரன்.அவரும் ஒரு ரவுடி தான்.(கெட்ட ரவுடி!!).பிரகாஷ்ராஜிற்கு விக்ரம் அவருடைய பழைய காதலியையே திருமணம் செய்து வைக்கிறார்.
ரகுவரன்,பிரகாஷ்ராஜ் கும்பல் அடிக்கடி மோதிக்கொள்கிறது.இரண்டு பக்கமும் ஆட்கள் இறக்கிறார்கள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.
சென்னைக்கு புது போலீஸ் கமிஷனராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ரவுடிகளையும் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார்.
விக்ரமிற்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரிசாவுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசைவர...முடிவில் என்ன ஆனது என்பது தான் கிளைமாக்ஸ்.
விக்ரம் இந்தப்படம் முழுக்க யாரையாவது அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அதற்கே நேரம் போய்விடுவதால் நடிப்பதற்கு நேரமேயில்லை.
திரிசா மூன்றாவது சீனிலேயே விக்ரமை காதலித்து விட்டு அவ்வப்போது டூயட்டிற்கு மட்டும் வருகிறார்.
ரகுவரனின் வில்லத்தனத்தைப் பார்த்து தியேட்டரில் அனைவரும் சிரிக்கிறார்கள்.படத்தில் காமெடி இல்லை என்ற குறையைத் தீர்த்து வைப்பது ரகுவரனின் வில்லத்தனம் தான்.
படத்தின் ஒரே ஆறுதல் பிரகாஷ்ராஜ் தான்.நன்றாக நடித்துள்ளார்.ஆனால் ஏற்கனவே பல முறை இதே போல் பார்த்துவிட்டதால் nothing special.
படத்தின் வசனங்கள் எஸ்.ராமகிருஷ்னணன்.பாபாவில் தொடங்கி இந்தப் படம் வரை தனக்கு சினிமா வசங்கள் எழுத வராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க துணையெழுத்து படிச்சிட்டு பல நேரங்கள்ள கண்ல இருந்து தண்ணி வந்திருக்கு)ப்ச்..
"முதன்முறை" என்ற பாடல் மட்டும் பரவாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வந்து குத்தாட்டம் போடுகிறார்.நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாடல் வரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாடல் வருகிறது ஒரே சலிப்பு...
கேமரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..
2007 ல் ரவுடிகள் படமாக வந்து கொண்டிருந்ததே...அப்போதே வந்திருக்க வேண்டிய படம்.தமிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட இந்நிலையில் too late...
முடிவில் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நம்மையும் சேர்த்து...
படத்தில் ரத்த ஆறு ஓடுவதால், பாடல்கள் தனிமை பெற்று விடுகின்றன. படத்தின் பெரும்பகுதி மோதல்... துரத்தல்... சண்டை... என இருப்பதால் படத்தின் இயக்குனர் லிங்குசாமியா அல்லது கனல் கண்ணனா என்று சந்தேகம் வந்து விடுகிறது.
பரிந்துரை:
இதற்கு மேல் உங்கள் இஷ்டம்!!!!
பின்குறிப்பு:
படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்.
என்ன கொடுமை சார் இது??
Sunday, January 20, 2008
ராமராஜன் - சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சா
இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன் " பார்ட் - II
நம்ம டவுசர் புகழ் கி " ராமராஜன் " ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் .
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் .
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள் .
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா ? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க !!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க !!!
கவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட . இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை .
ரா .ரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க ! அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ -கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு !!!
செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் .
கவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட ...
ரா. ரா: ஏன்ன அடிச்சிங்க ???
கவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா ? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா ? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட ???
....
2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ் :அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா ?
1 நிமிடம் கழித்து :
கவுண்ட்ஸ் : ஹும் !!! ஐயோ !!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட ?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது .
ரா . ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான் ?
கவுண்ட்ஸ் : என்ன கேட்டானா ? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம் ... ஐ - கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் .
ஜி . பாலையா : ஹாஹாஹா
கவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது ? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன் .
காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் .
புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு ...
கவுண்ட்ஸ் : ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ் : அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன ... ஏய் சொல்லு ...சொல்லு
புதுசு : சொல்றங்க !!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் " A" போட்றன்னு சொன்னாருங்க ..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ் : ஓடிப்போ நாயே!!! ( செந்திலைப் பார்த்து ): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில் : ஒரு விளம்பரம்தான்...
கவுண்ட்ஸ் : ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான் !!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
( சரளாவைப் பார்த்து ): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????
கோ . சரளா: தோ !! கொஞ்சம் சும்மா இருக்கீகளா !!! என்னை TCS ல கூப்டாகோ, Wipro ல கூப்டாகோ , infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன் ...
கவுண்ட்ஸ் : ஹிம்ம்ம்ம்ம்ம்...... ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracle ல கூப்டாகோ, நியூ யார்க்ல IBM ல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா ?
கோ . சரளா : ஹிக்க்க்க்ம் ... இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை ...
கவுண்ட்ஸ் : ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க !!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன் ! ஜாக்கிரதை !!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் ...
Saturday, January 19, 2008
புதிய டாக்டர்ஸ்
ஆளாளுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, அதுக்கு இருந்த மரியாதையே போச்சு.
அது சரி, நம்ம ஆளுங்க எதுக்கு இப்பிடி வெறித்தனமா இருக்காய்ங்க பட்டம் குடுக்க?
திலகம், வேள், வாணர், லட்சியம், சூப்பரு, தல, புர்ச்சி, தளபதி, இளையxxx, வெண்ணன்னுட்டு அப்பிடியே திராவிடக் கச்சிகளோட இலவசம் மாதிரி அள்ளி அள்ளிக் குடுகுறாய்ங்க.
நடிகன்களுக்கு மட்டும் இல்ல, அரசியல்வாதிகளுக்கும் (வியாதிகள்??) பட்டம் வாங்குறதும் சரி குடுக்குறதும் சரி, கொஞ்சம் கூட வெக்கமேயில்லாம இருக்காங்க.
ஒவ்வொரு கட்சியிலையும் அஞ்சாறு தளபதிங்க (இளைய தளபதி, மூத்த தளபதி ன்னு), தானைக்குத் தலைவர், புர்ச்சிக்குத் தலைவி, கப்பல் இல்லாமையே கேப்டன், காத்தடிச்சாலே விழறவருக்குப் புசலு, விடிவெள்ளி, ஆடிவெள்ளி அப்பிடின்னு ஏகப்பட்டது.
சமீபத்துல, சாதனை செஞ்ச நம்ம புர்ச்சி தளபதி (எந்தப் படையிலே இருந்தாரோ என்ன எழவோ) விசய்க்கும், அரிய பெரிய கருத்துக்கள சினிமா மூலமா கொடுத்து கல்லா கட்ற சங்கர் சாருக்கும் இந்தப் பட்டத்த கொடுத்து இருக்காங்க.
ஒரு பத்திரிக்கையிலே இப்பத்தான் படிச்சேன்.. இந்தப் பட்டங்கள்லாம் செல்லாதாம்! ஒழுங்கா பட்டம் குடுக்கனும்னா, நம்ம கவர்னரு கையில போய் சொல்லி அனுமதி வாங்கனுமாம். இவிங்க வாங்கலையாம்.
என்னப் பெரிய காரியம்? கவர்னரு அய்யாவுக்கும் ஒரு பட்டம் தரேன்னு சொல்லி அனுமதி வாங்க வேண்டியதுதான். இந்த மாதிரி அனுமதி குடுக்குறதுக்குத்தானே அவரு இங்கே மொழி தெரியாத மானிலத்துல குப்ப கொட்றாரு. மொழி தெரிஞ்சவர கவர்னரா போட்டா டவுசர் கிழிஞ்சுடும்னு இதுக்குதான் மொழி தெரியாதவய்ங்கள இப்பிடி போட்றாங்களோ?
என்ன கருமமோ, நம்ம நாட்ல டாக்டருக்கு பஞ்சமில்லப்பா. ஆனா, குப்பனுக்கும் சுப்பனுக்கும் வைத்தியம் பாக்கத்தான் நாதியில்ல.
ஓ....... அது வேற டாக்டருங்களா?
Saturday, January 12, 2008
ஆ(வ்)ஸ்திரேலியாவும் அம்பையரும்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அடுத்து வரப்போகும் சில ஆட்டங்களின் நிலை குறித்த பரபரப்பான காட்சிகள்..
என்னப்பா எட்டு பேர் தான் அவுட் ஆகியிருக்காங்க..? ஆல் அவுட்னு அம்பையர் கிளம்ப சொல்றார்?
ஷ்.. இது ஆஸ்திரேலியா மறந்து போச்சா? கத்தி பேசாத... பைன் போட்டுருவாங்க...
===================================================
சார் மணி மத்தியானம் பதினொன்னு தான் ஆகுது.. சூரியன் சுள்ளுன்னு அடிக்குது.. ஒரு விக்கெட் தான் இருக்கு.. அஞ்சு ஓவர் போட்டா ஆல் அவுட் ஆகிடுவாங்க... பேட் லைட்னு(BAD LIGHT) ஆட்டத்தை கேன்சல் பண்றீங்க... ?
ஆமாய்யா கண்ணு கூசுற அளவுக்கு வெயில் அடிச்சா அது பேட் லைட் தானே? நான்சென்ஸ்...
===================================================
இவர் இப்ப தானே அவுட் ஆனார்? மறுபடி ஆட வர்றார்?
அவர் கருப்பினத்தை சேர்ந்தவர்னு தானே அவர் ஆட கூடாqதுன்னு பிரச்சினை பண்றீங்க? யூ ஆர் சஸ்பெண்டட் ஃபார் 3 மேட்சஸ்....
***
என்னப்பா என்ன பிரச்சினை?
ஆஸ்திரேலியா கேப்டன் அவங்க போலர்ஸ் ஸ்டம்புக்கு போடற பந்தையெல்லாம் இந்தியா பேட்ஸ்மேன் பேட்டால தடுத்துடறாங்கன்னு கம்பிளெயின்ட் பண்ணிட்டிருக்கிறாராம்...
***
அம்பையர் சார் சொன்னா நம்புங்க சார்.. ஸ்டேடியத்த விட்டு பால் வெளிய போனா அது சிக்சர் தான் சார்.. ஸ்டேடியத்தை விட்டு பந்தை வெளிய அடிச்சா அவுட்டுன்னு எப்போ ரூலை மாத்தினாங்க...
***
என்னயா டென்ஷனா இருக்கே?
என்னய்யா அநியாயமா இருக்கு... உணவு இடைவேளை முடிஞ்சு பேட்ஸ்மேன் உள்ளே வந்துட்டு இருந்தாங்க. க்ரீசுக்கு வரதுக்குள்ள ரெண்டு பேரையும் ரன் அவுட் பண்ணிட்டாங்க...
***
ஆனாலும் நம்ம ராமசாமிக்கு ரொம்ப நக்கல்...
எப்படி சொல்றே?
பேசாம அம்பையர்களுக்கும் ஆஸ்திரேலியா டீம் யுனிபார்ம் போட்டு விட்டுருங்கன்னு நக்கல் அடிக்கிறார்...
***
ஏன் நம்ம டீம் கேப்டன் கலங்கி போய் இருக்கார்?
அவர் அடிச்ச பந்தை அம்பையரே கேட்ச் பிடிச்சுட்டு அவுட்டும் கொடுத்துட்டாராம்...
Tuesday, January 8, 2008
ராமர் பாலமும் வானரங்களும்...
இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளின் கையில் இப்போது சேதுசமுத்திர திட்ட பூமாலை.ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ராமருக்காகவும் அவரின் பாலத்திற்காகவும் தங்கள் உடல்பொருள் ஆவி அனைத்தையும் துறக்க சபதமேற்று செயல்படுகிறா தியாக திருவிளையாடலை நூறு கோடி சனங்களும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பதால் ஊடகங்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கு பிழைப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆண்டுகள் பலவாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்தினை கடந்த பாரதீயஜனதா தலைமையிலான கூட்டனி அரசு தூசிதட்டி அதை ஆராய ஒரு குழுவமைத்து பின் திட்ட அறிக்கை தயார்செய்து நிதியெல்லாம் ஒதுக்கி...வைக்கோவும்,கலைஞரும் தங்கள் அப்பன் வீட்டு சொத்திலிருந்து இந்த திட்டத்திற்கு பணம் தருவதைப் போல இதற்கு உரிமை கொண்டாடிய கூத்துக்களை நிறைய பேர் மறந்திருப்பீர்கள்....
புதிதாய் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆர்பாட்டமாய் ஒரு விழா நடத்தி இத்திட்டத்தை துவக்க பிடித்தது சனி....நமது முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்கள் சுற்று சூழல் ஆர்வலராய் மாறி இது கூடாது என எழுப்பிய கூச்சல் காற்றில் கரைந்து போனதை நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ப்ராஜக்ட்
படிக்க ஒரு ஊரு………. ப்ராஜக்ட் செய்ய ஒரு ஊரு……..
கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்டின் தலையெழுத்துக்கு….
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆம், ஈரோடில் படித்த நான்…..
ஐ டி பீல்டு அமுங்கிப் போயிருக்கும் சென்னைக்கு ப்ராஜக்ட் செய்யப் போனேன். சென்னை என்னை ரீ சைக்கில் பின் போல ஆக்கியது.
டாஸ் படிக்க கூட வழியில்லாத எனக்கு ASP.NET யில் ப்ராஜக்ட் செய்யச் சொன்னான் ஒருவன்!
இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை, இந்த லட்சனத்தில் வெப்சைட் ப்ராஜக்ட் டாம்!
ஆண்மையா அரைவேக்காட்டுத்தனமா....
சேது சமுத்திர திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைக்கும் போது பின்னாளில் தங்களின் பிழைப்புக்கு வழிகோலும் பிரச்சினையாக மாறுமென மதவாத அரசியல் கட்சிகளும்(வாதிகளும்) கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
தங்களின் பாரம்பரியங்களை கட்டிகாப்பாற்றும் இவர்களுக்கு அமெரிக்க நாசா சொல்லும் வரையில் இந்த பாலம் இருந்ததே தெரியாது என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கு முன்னர் வரை இவர்கள் இதை 'ஆடம்ஸ் ப்ரிட்ஜ்' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.தரைக்கு கீழே ஓடும் சரஸ்வதி நதியை பற்றி எழுதிவைத்த புராணங்கள் இந்த பாலம் இந்த இடத்தில் மகாகணம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியினால் கட்டப்பட்டது என குறித்து வைக்காமல் போனது மிக துர்பாக்கிய நிகழ்வு.
சற்றேறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாயை கடலில் கொட்டும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென மூக்கு வியர்த்து காவியும் கமண்டலமுமாய் கிளம்பி ராமேஸ்வரத்திற்கு கள்ள ரயிலேறி வந்து தங்களின் பக்தியையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திச் சென்றவர்களுக்கு, இந்த பிரச்சினைதான் மீண்டும் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் என தெரிந்ததும் பாலத்தை வைத்து குரங்கு வித்தை காட்டத் துவங்கியதும் அதை உசுப்பிவிடும் வகையில் நமது முதல்வரவர்கள் அரைவேக்காட்டுத் தனமாய் ஒரு கருத்தைச் சொல்லப் போக பிரச்சினை சுருசுருவென பற்றிக்கொண்டு விட்டது.
இந்த திட்டத்திற்காய் உடல்பொருள் ஆவியெல்லாம் தருவேன் என தமிழகமெங்கும் மேடையேறி அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த 'வைக்கோ' நிச்சயமாய் அம்னீஷியாவினால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடை தீர்மானமான கருத்து. இல்லையென்றால் இன்னேரம் துள்ளிக்குதித்து தெருவிற்கு வந்திருப்பார்தானே...நம்முடைய துரதிர்ஷ்டம் இலங்கை தமிழர்களுக்கு இடரென்றால்தான் அவரது தசையாடும் போலும்.
இந்த திட்டம் வந்தால் முதலில் பவழப்பாறை திட்டுக்கள் எல்லாம் அழிந்து போய் சுற்றுப்புற சூழல் மாசுபடுமென கவலைப்பட்டு இயற்கை ஆர்வலராய் அவதாரமெடுத்த நம்து முன்னாள் முதல்வர் அருமைத் தலைவி, பொன்மனச்செல்வி அம்மா அவர்கள் பின்னாளில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என சூளுரைத்த காண்டத்தை அநேகமாய் எல்லோரும் மறந்திருப்பீர்கள் என்கிற தைரியத்தில் இந்த வழியாக் கப்பல் போனால் செலவு கூடுமென பொருளாதார நிபுணராகி திட்டத்தை இப்போது எதிர்க்கிறார்.
குடும்பத்தில் குழப்பம், கூட்டணியில் குத்துவெட்டு வீட்டுக்குள் வேகத்தை காட்டமுடியாத தலைவர் தன் கோவத்தையும், எரிச்சலையும் சபையில் ராமர் மீதும், உச்சநீதிமன்றம் மீதும் காட்டி பிரச்சினைக்கு மேலும் தீ வார்க்கிறார்.
இயற்கையில் உருவான மணல் திட்டு என நிலவியல்,கடலியல் துறை வல்லுனர்கள் கூவிக்கூவி சொன்னாலும் எந்த மடையன் காதிலும் விழவில்லை. அவனவனுக்கு அவனவன் கஷ்டம்...அதை வெளியில் சொல்லமுடியாமல் கொள்கை, வெங்காயம், பண்பாடு என கூத்தடிக்கின்றனர்.
காண்ட்ராக்டர்களிடம் வாங்கிய கமிஷனுக்காய் ஒருவர், வருமானம் போய்விடுமே என்கிற அச்சத்தில் இலங்கையில் இருந்து வரும் நெருக்கடிக்கு விலை போய் கூச்சலிடும் ஒருவர்..எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டுமென நினைக்கும் புண்ணியவதி, மதத்தின் பெயரால் மக்களை மடையர்களாக்கி பதவி சுகம் காண நினைக்கும் இந்துத்வவியாதிகள்...இருக்கிற ஆட்சியதிகாரத்தை காப்பாற்ற எந்தளவும் கீழிறங்க தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள், இவர்களுக்கிடையில் முந்திரிக்கொட்டையாய் கருத்துச் சொல்லும் நீதிமான்கள்....
மொத்தத்தில் அனைவருக்கும் தங்கள் சொந்த லாபநஷ்டங்களே முன்னால் நிற்கின்றன. இதைத்தான் பொதுநலமென வாய்ஜாலமாய் விற்றுக்கொண்டிருக்கின்றனர். நாம் அரை வேக்காடுகளாய் ஆளுக்கொரு பக்கம் நின்று லாவனி பேசிக்கொண்டிருக்கிறோம்.
300 மீட்டர்/அடிக்கு ஒரு மணல் திட்டை அகற்றுவதால் தமிழகத்தில் ஆறு கடற்கரையோர மாவட்டங்களில் தொழில்வாய்ப்பும்,ராமேஸ்வரம்,தூத்துக்குடி,கடலூர் போன்ற துறைமுகங்களுக்கு நன்மையும் இதனால் அரசிற்கு கணிசமாய் வருவாயும், கப்பல்களுக்கு எரிபொருள் சேமிப்பும் வருவதை தங்கள் சொந்த ஆசாபாசங்களுக்காய் வீறுகொண்டெழுந்து வீதி நாடகம் போடும் இவர்களையா ஆண்மையாளர்கள் என்பது...அரைவேக்காடுகளா! விழித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவும் கம்ப்யூட்டரும் ..
தமிழ் சினிமாவில் கம்ப்யூட்டர் என்றாலே ரமணாவில் கேப்டன் விண்டோஸ் மீடியா பிளேயரில் டைப் செய்வதை மட்டும் நினைத்து சிரிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது
- த்ரிஷா கஷ்டப் பட்டு மவுசை ஆட்டி ஆட்டி சூர்யா பக்கத்தில் போய் நிக்கும் அந்த காட்சி(’பார்க்காத என் பார்க்காத’)..
-சிங்காரவேலனில் ‘பாப்பாவுக்கு கொஞ்சம் டிரஸ் போட்டு காட்டுங்களேனு’ கமல் கம்ப்யூட்டர் விஞ்ஞானியிடம் கேட்க்கும் காட்சி.
-தாஸ் படத்தில் தீவிரவாதிகள் பாம் வைக்கும் காட்சி
வீராசாமி - வி.ஐ.பி கமெண்ட்ஸ்
டி.ஆரின் வீராசாமி பார்த்துவிட்டு வந்த வி.ஐ.பிக்களின் எக்ஸ்க்ளுசிவ் கமெண்ட்ஸ் வெட்டிப்பயலுக்கு கிடைத்திருக்கிறது
வைகோ…
1960களிலே தமிழன் தென்னமெரிக்காவில் அருமையான படங்களை தயாரித்து ஆஸ்கர் அவார்டுகளை வாங்கினான் என்பது தமிழர் வீர வரலாறு. அதை நான் என்றும் மறந்தவனில்லை.
ஆனால் அதை இன்று இந்த _முக அரசு மறந்து வீரத்தை விற்று கோழைகளாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இதை எதிர்த்து எங்கள் இளைஞர் படை கோவை கற்பகம் காம்ப்லக்ஸிலிருந்து நடை பயணத்தை ஆரம்பிக்க போகிறது என்பதை இப்போது தெரிவித்து கொள்கிறேன்.
__முகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் எங்கள் கொள்கையிலிருந்து நாங்கள் விலகவில்லை என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம்.
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி
என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை
தங்கச்சி அழாதம்மா..அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.
பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
அந்த நாள் ஞாபகம் …
1981 ஆம் ஆண்டு, இடம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0 - 1 என இந்தியா பின் தங்கி இருந்த நிலையில் கடைசி ஆட்டத்தின் நான்காவது நாள், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி பந்து வீச வேகமாக ஓடி வருகிறார். கவாஸ்கர் தடுத்தாட முயற்சிக்கிறார். விக்கெட் முன் கால் என்ற வகையில் முறையில் நடுவரிடம் முறையிடப் படுகிறது. நடுவர் ரெக்ஸ் வொயிட்ஹெட் கவாஸ்கர் ஆட்டமிழந்தார் என கைத்தூக்க , பந்து மட்டையில் பட்டது என புலம்பிக் கொண்டே மைதானத்தில் வெளியேறிக் கொண்டு இருக்கையில் திடிரென திரும்பி மறுமுனையில் நின்ற மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சேத்தன் சௌகானையும் அழைத்துககொண்டு மைதானத்தில் இருந்து வெளியேற எத்தனிக்கையில் அப்போதிய அணி மேலாளர் விங் கமாண்டர் துரானி மைதானத்தின் எல்லைக்கு வந்து கவாஸ்கரை சமாதனப் சமாதனப் படுத்தி சேதன் சௌகானை திரும்ப அனுப்பி ஆட்டத்தை தொடரச் செய்தார்.
இந்த ஆட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக இது அமைந்தது எனக் கூறலாம். 324 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அன்றிரவு நடந்த ஒரு விருந்தில் இந்தியக் கிரிக்கெட்டைப் பற்றி ஏளனமாக ஆட்டக்காரர்களின் முன்னிலையிலேயே பேசப்பட்டதாம். காயம் காரணமாக பந்து வீச முடியுமா என்று சூழலில் இருந்த கபில்தேவ் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு பந்து வீச ஆரம்பித்தார். Cricket is a glorious game of uncertainities என்பது மற்றொரு முறை நிருபணமானது. ஆம் கபில்தேவி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 1- 1 என்று தொடரையும் சமன் செய்தது.
Tuesday, January 1, 2008
கல்லூரி
+2 வில் சேர்ந்து படிக்கும் 9 நண்பர்கள்(4 பெண்கள்,5 ஆண்கள்) மதுரைக்கு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக B.A வரலாறு பிரிவில் சேர்கிறார்கள்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் படிக்க வேண்டிய பெண் (தமன்னா) தற்காலிகமாக அந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளது.ஆரம்பத்தில் இவர்களோடு ஒட்டாமல் இருக்கும் அந்தப் பெண், ராகிங்கில் இருந்து காப்பாற்றியவுடன் இவர்களோடு நட்பு கொள்கிறது.நட்பின் காரணமாக டெல்லியில் இருந்து படிக்க வரும் வாய்ப்பையும் மறுக்கிறது.
"எங்களுக்குள் காதல் வராது , நட்பு மட்டுமே வாழ்க்கை முழுவதும் தொடரும்" என்ற நண்பர்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தகர்த்து அகிலிற்கும், தமன்னாவிற்கும் காதல் வருகிறது.
இது சரியா? தவறா? என்ற குழப்பம் இருவருக்கும் தீர்வதற்குள் அனைவரும் ஒரு பேருந்தில் கல்விச் சுற்றுலா செல்கிறார்கள்.இவர்கள் காதல் நண்பர்களுக்குத் தெரியவரும் வேளையில்....தியேட்டரில் நிசப்தம்.அனைவரும் கனத்த மனதுடன் வெளியே வருகின்றனர்.(அப்பாடா கிளைமேக்ஸ் என்னன்னு சொல்லல)
படத்தின் ஆரம்பத்தில் வரும் பஸ் பாடல் காட்சியிலேயே நம்மைக் கல்லூரி மூடிற்கு கொண்டு வந்து விடுகிறார் பாலாஜி சக்திவேல்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயல்பாகவே உலவ விட்டிருப்பது படத்தின் சிறப்பு.எல்லோரும் சினிமாத்தனமாக இல்லாமல் நிசத்தில் நாம் பார்க்கும் மனிதர்கள் போலவே இருக்கிறார்கள்.
அகிலும்,தமன்னாவும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள். கயல்விழியாக வரும் பெண் பட்டய கிளப்பி உள்ளார்.குடும்ப நிலை உண்ர்ந்து படிப்பது, தப்பு செய்பவர்களின் சட்டையைப் பிடிப்பது, தமன்னா தன் காதல் பற்றி சொல்லும் போது அதைப் புரிந்து கொள்வது என அத்தனையும் அழகு.
ஆதிலட்சுமியாக வரும் பெண், சரவணணாக வரும் பையன் அகிலின் தங்கை, தமன்னாவை ஒரு தலையாக லவ் பன்னும் சீனியர் என அனைவரும் நம் நினைவில் நிற்பார்கள்.
ஒரே காட்சியில்,9 மாணவர்களின் குடும்ப கஷ்டங்களையும் உறுத்தாமல் காட்டியிருப்பது கவிதை.
இரட்டையர்களாக வந்து "ஏங்க நீங்க சொல்லுங்க? ஏன் நீங்க சொல்லக்கூடாதா" என்ற ஒரு டயலாக் மட்டும் வைத்துக் கொண்டு படம் முழுக்க வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு பேர்.
பாலாஜி சக்திவேல் காட்சிகளால் கவிதை வடிக்கிறார் என்றால்,நா.முத்துக்குமார் கவிதைகளால் காட்சி அமைக்கிறார்.(சரியா? தவறா? பாடல் மிகச் சிறந்த உதாரணம்.)பாடல்கள் அத்தனையும் அருமை.
செழியனின் கேமரா இயல்பாக உறுத்தாமல் எல்லாவற்றையும் படம் பிடித்துள்ளது.
ஹைகோர்ட்டில் தூக்குத் தண்டணை உறுதியாகி உள்ள இந்த சூழலில், ஆந்திர அரசியல் போல் காட்டினாலும் அந்த சம்பவத்தை அழுத்தமாக காட்டியுள்ளது இயக்குநரின் துணிச்சல்.(ஐயையோ கிளைமேக்ஸ சொல்லிட்டேனா???)
இவ்வளவு இருந்தும் படம் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வு.படத்தில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.(உ.ம் கயல்விழி கோபிப்பது, இரட்டையர்கள் காட்சி)
கதையும் ஏப்ரல் மாதத்தில்,பிரியாத வரம் வேண்டும் போன்ற கல்லூரிகளில் பார்த்தது தான்.(காதல் படத்தில மட்டும் கத புதுசோ??)
நம் உணர்ச்சிகளை வைத்து இவர்கள் வியாபாரம் செய்வது மட்டும் நெருடல்.
பரிந்துரை:
எல்லோரும் பார்க்கலாம்.
