Wednesday, March 19, 2008

ஜோடி நம்பர் 1 now பொய் நம்பர் 1

வர வர இந்த விஜய் டிவி தொல்லை தாங்க முடியலே. ஏற்கனவே இந்தத் தொலைக்காட்சி, தமிழ் தெரியாத தமிழர்களுக்குன்னு ஆயிப் போச்சு. ஒரு கிராமாத்தானா, இந்த டீவியே எப்படிப் பாக்குறதுன்னு எனக்குத் தெரியல்ல.

இதில் வருகிற ஒரு நிகழ்ச்சி 'ஜோடி நம்பர் 1'. இது அப்பட்டமான அமெரிக்கத் தொலைக்காட்சியின் தழுவல். இது, 'dance with stars', 'do you think you can dance' போன்ற நிகழ்ச்சிகளின் காப்பி. ஆனா, காப்பி அடிச்சாலும், ஒழுங்கா காப்பி அடிக்கனும். சொந்தப் புத்தியில் எதுவும் அளிக்க இயலாத நம் 'தமிழ்' தயாரிப்பாளர்கள் (குறிப்பா, விஜய்). அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காப்பியடித்துக் கொடுப்பது, இப்போது தொடரும் நிகழ்வாகி விட்டது. அமெரிக்காவில், இந்த நிகழ்ச்சிகளின் போது, அழுமூஞ்சி போட்டியாளர்கள் நடத்தும் நாடகங்கள், நம் தமிழ் நிகழ்ச்சிகளில், இயக்குனரால் சொல்லிக் கொடுக்கப்பட்டு, மிகக் கேவலமாக நடிக்கப் படுகிறது.

சமீபத்தில், ஜீவா மற்றும் அந்த அழுமூஞ்சி போட்டியாளர் பங்கு பெறும் ஒரு preview to the show மாதிரி ஒரு கண்றாவி காண்பிக்கப்பட்டது. அதில், ஜீவா (யோவ், உனக்கு ரஜினி மாதிரி விட்டா வேறு எதுவும் தெரியாதா? கனாக்கானும் காலங்கள் கொடுத்த மரியாதை இதில் போய்விடும் போல் இருக்கு!), ரஜினி பாட்டைத் தவிர வேறு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று அழும்பு. அந்த அழுமூஞ்சி, காலில் விழுறேன், நான் தேர்ந்தெடுத்த பாட்டுக்கு ஆடுன்னு ஒரே நாடகம். இதில் என்ன ஒண்ணு தெரியுதுன்னா, இதுங்க எல்லாம் நடிக்குதுங்க. ஆனா, சீரியலில் சொதப்புற மாதிரி, ஒழுங்கா நடிக்கத் தெரியல. இல்ல, சொல்லிக்கொடுத்தத ஒழுங்கா பண்ணத் தெரியல. இது பதிவு பண்றது, இதுங்களுக்குத் தெரியாதாம். என்னங்கடா காதுல பூ மரமே வைக்கிறீங்க?

இதுங்க ஒரு வழியா 'ரிகர்சல்' பன்ணி முடிச்சுட்டு, ஆட வருதுங்கலாம். நடுவர்கள் சரியா மார்க் போடலியாம். மேடையில் இன்னும் ஒரு அழுகாச்சி. நடுவர்களின் முடிவு என்ன? அப்பிடின்னு ஒரு பின்குரல் வேற. ஏன்டா, தமிழனுங்கள எந்த அளவுக்கு கேணையனுங்களா ஆக்கனும்னு ஒரு விவஸ்தையே கெடையாதா?

ஏற்கனவே, விஜய் டீவி பாக்கிறவனுங்க தமிழ் மட்டும் தெரிஞ்சுருந்தா தொலைஞ்சானுங்க. பாதி, ஒரு எழவும் புரியாது. நிகழ்ச்சி குடுக்குறவனுங்க எல்லாரும், இங்லிஷ்காரனுங்களுக்கு (அதுவும் உருப்படியா இல்லை!) பொறந்த மாதிரி, பாதி இங்லிஷ் கலந்து பாதி தமிழ் (அப்பிடிதான் சொல்றானுங்க!) கலந்து ஒருத்தனுக்கும் புரியாத, தமிங்கலனுக்கு மட்டும் புரியுற மாதிரி பேசிகிட்டுத் திரியறானுங்க.

தமிழ் தெரிஞ்சவனும், ஏதோ தமிழில் பேசுனா கொன்னு போட்டுற மாதிரி, அறைகுறை ஆங்கிலத்தில் பேசி உயிர எடுக்குறானுங்க. ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, காபி வித் அனு, அறிந்ததும் அறியாததும் (தலைப்ப பாத்துட்டு ஏமாந்தவன்ல நானும் ஒருத்தன்), EQ2, திறந்திடு சீசேம் இது எல்லாமே தமிழ் மட்டும் தெரிஞ்சவனுக்காக அளிக்கப் படுபவை அல்ல. இப்பிடி சொல்லிகிட்டே போவலாம்.

நான் சொல்ல வறது என்னன்னா, தமிழகத்தில் தமிங்கலர்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைவு(கிராமங்களில்). தமிழர்கள்தான் அதிகம். அதற்குத் தகுந்த மாதிரி நிகழ்ச்சிகளை அளிக்க கொஞ்சம் விஜய் தொலைக்காட்சி முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், 'விஜய் டீவி. தமிங்கலர்களுக்கான டீவி' அப்பிடின்னு வெளிப்படையா விளம்பரம் செய்யனும்.

காசு சம்பாதிக்கிறதுக்காக, ஹிட் ரேட் ஏத்துறதுக்காக இந்த மாதிரிக் கேவல வேலைகளில் ஈடுபடக்கூடாது. ஒழுங்கான (தமிழ் மொழியின் சீர் குலையாத வண்ணம் ஓரளவு) நிகழ்ச்சிகளைக் கொடுக்க முன்வர வேண்டும். முடிந்த வரை சொந்தப் புத்தியில் புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யவேண்டும். கண்மூடித்தனமாக அமெரிக்கன் டீவிக்களை பின்பற்றக் கூடாது.

No comments: